பூண்டில் அதிகளவு தாதுக்களும் ,வைட்டமின்களும், ஐயோடின், சல்பர் ,குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றன.
இது ஒரு சிறந்த கிருமி நாசினியாகும் .இது வியர்வையை போக்கும் உடல் சக்தியை அதிகப்படுத்தும், சளியை கரைத்து சுவாச தடையை நீக்கும் தன்மை கொண்டது.
ஜீரண சக்தி அதிகரிக்கும் .ரத்த கொதிப்பை தணிக்கும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் பூண்டு சாப்பிடுவதால் தாய்ப்பால் அதிகரிக்கும்.
உடல் பருமனையும் ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கும். இதய அடைப்பை நீக்கும். நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவை குறைக்கும் தன்மை கொண்டது.
இரவில் படுக்கும் முன்பு பூண்டு விதைகளை போட்டு காய்ச்சிய பாலையும் சாப்பிட்டால் தொடர்ந்து வரும் இருமல் நிற்கும்.
பிளேக் முதல் சார்ஸ் நோயை உண்டாக்கும் கிருமிகள் வரை அழிக்கும் திறன் கொண்டது.