மாரடைப்பைத் தடுக்கும் ப்ரக்கோலி- கட்டாயம் உணவில் சேர்த்துகொள்ளவும்

 

எப்படியும் நாம் ஏதாவது நோயிற்கு இரையாவது உறுதி. அதனால், நோய்களிடம் இருந்து நம்மைப் பாதுகாக்கும் உணவுகளைத் தவறாமல் எடுத்துக்கொள்வது அவசியமான ஒன்று. உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க, வாக்கிங், ஜாக்கிங், டென்னிஸ் உள்ளிட்டவை உதவும் என்பது ஒருபுறம் என்றால், ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் உணவுகளை எடுத்துக்கொள்வதும் மறுபுறம் நமக்கு உதவுகின்றன. அந்த வகையில், மாரடைப்பில் இருந்து நம்மைப் பாதுகாக்கும் உணவுகளில் ஒன்று ப்ரக்கோலி.

காலிஃபிளவரை விட சற்று வாசனை அதிகமாகக் கொண்ட ப்ரக்கோலி அதன் வாசனைக்காகவே நிறைய பேருக்குப் பிடிப்பதில்லை. ஆனால் அதை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வராமல் தடுக்க முடியும். இலைவடிவ காயான ப்ரக்கோலி இதயத்திற்குச் செல்லும் இரத்த நாளங்களால் அடைப்புகள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. இதை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் இதயம் எப்படி பலப்படுவது உறுதி என்றார்.

தடுப்பது எப்படி?
அதிக அளவிலான கால்சியம் உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது அவற்றில் உள்ள கொழுப்பு ரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தக்கூடும்.
ரத்தக் குழாயில் கால்சியம் படிதல் அதிகமாகும் போதும் மாரடைப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.அவ்வாறு அதிக அளவிலாக கால்சியம் படிதலை ப்ரக்கோலி சாப்பிடுவதன் மூலம் தவிர்க்கலாம்.

​இரத்த குழாய் அடைப்பு
நம்முடைய இதயத்திலுள்ள தமனிகள் மற்றும் அவற்றிலுள்ள நரம்புத் திசுக்களை பாதித்து ரத்தத்தையும் கொழுப்பையும் இதயத்திற்குச் செல்லும் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தும். இதனால் இதயத்திற்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைபடும். இதனால் அறிகுறிகள் இல்லாத திடீர் மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். இதன் விளைவாகத் தான் சமீபத்தில் நிறைய கார்டியாக் அரெஸ்ட் பிரச்சினை ஏற்படுகிறது.

ப்ரக்கோலியில் கோலியில் அதிகம் நிறைந்துள்ள வைட்டமின் கே, எலும்புகளை வலுவாக்கும். ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும். குறிப்பாக, மெனோபஸ்க்கு பிறகு பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மையைச் செரிசெய்ய உதவும் இதில்

​இலைவடிவக் காய்கறிகள்
ப்ரக்கோலி மட்டுமல்ல, லெட்யூஸ், முட்டைகோஸ், பிரஸ்ஸல்ஸ் போன்ற இலைவடிவ காய்கறிகளைச் சாப்பிடுவதன் மூலம் இதயம் பலப்படும்.
மாரடைப்பு, பக்க வாதம் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க முடியும்.
இலை வடிவ காய்கறிகள் மற்றும் ப்ரக்கோலி அதிகமாக எடுத்துக் கொள்வது இதய ஆரோக்கியத்தைக் காப்பதோடு மட்டுல்லாது, ஜங்க ஃபுட் போன்றவற்றின் மீதான விருப்பத்தையும குறைக்கிறது என்று கூறினார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories