யாரெல்லாம் கற்றாழையை தவிர்க்க வேண்டும்:

கற்றாழையை (Aloe Vera) குறிப்பிட்ட அளவில் மட்டுமே உட்கொள்ள வேண்டும். கற்றாழையை அதிகமாக உட்கொள்வது பல பிரச்சனைகளை உண்டாக்கும். மேலும், சில நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்கள் மற்றும் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் கற்றாழை உட்கொள்ளக்கூடாது. யார் யார் கற்றாழையைத் தவிர்க்க வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம்.

மலச்சிக்கல் (ம) வாயு பிரச்சனை உள்ளவர்கள்
உங்களுக்கு மலச்சிக்கல் மற்றும் வாயு பிரச்சனை இருந்தால், கற்றாழை சாப்பிட வேண்டாம். இது வாயுபிரச்சனையை இன்னும் அதிகமாக்கக்கூடும். மேலும் மலம் கழிக்கும் செயல்முறையில் கற்றாழையால் சில தாக்கங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்பதால், இதை தவிர்ப்பது நல்லது.

கர்ப்ப காலத்தில் (Pregnancy)
கர்ப்ப காலத்தில் கற்றாழையை உட்கொள்வது கருப்பை சுருங்கும் சிக்கல்களை ஏற்படுத்தும். இது கருச்சிதைவு மற்றும் பிறப்பு குறைபாடுகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். ஆகையால் கருவுற்றிருக்கும் பெண்கள் கற்றாழையை கண்டிப்பாக உட்கொள்ளக்கூடாது மற்றும்

இரத்த அழுத்தம் குறைந்தால் (Low Blood Pressure)
உங்கள் இரத்த அழுத்தம் குறைந்தால், கற்றாழையைப் பயன்படுத்துவதை நிறுத்துவது நல்லது. கற்றாழை ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. உங்கள் இரத்த அழுத்தம் ஏற்கனவே குறைவாக இருந்தால், கற்றாழையை உட்கொள்வது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும் எனவே

இதய நோய் உள்ளவர்கள் (Heart Disease)
இதய நோய் உள்ள நோயாளிகளும் கற்றாழை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனையின்றி கற்றாழையை உட்கொள்ளக் கூடாது. கற்றாழையை அதிக அளவில் உட்கொண்டால், அது உடலில் அட்ரினலின் ஹார்மோனை அதிக அளவில் உற்பத்தி செய்கிறது. இது ஒழுங்கற்ற இதயத் துடிப்பு பிரச்சனையை ஏற்படுத்தும் மற்றும் பதட்டத்தன்மையை அதிகரிக்கும் இதில்

 

சிறுநீரக கல் உள்ளவர்கள் (Kidney Stone)
சிறுநீரக கற்கள் பிரச்சனை உள்ளவர்களும் கற்றாழை சாப்பிடக்கூடாது. இது உங்கள் பிரச்சனையை அதிகரிக்கக்கூடும். சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்கள், கற்றாழையைப் பயன்படுத்துவதற்கு முன்பு கண்டிப்பாக மருத்துவரை அணுகவும் என்று கூறினார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories