வயிற்றின் நண்பன்- அத்தனை நோய்க்கும் அருமருந்து இதுதான்!

 

இயற்கை நமக்கு அளித்த அற்புதக் கொடைகளுள் முதன்மையானது தேன். வயிற்றுக்கு நண்பன் என வருணிக்கப்படும் தேன், மிகச்சிறந்த மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. அதனால்தான் பழங்காலம் தொட்டே, மருத்துவம் முதல், ஆரோக்கியம் வரை அனைத்திற்கும் தேனைத் தவறாதுப் பயன்படுத்தி வருகிறோம். குறிப்பாகக் குழந்தைகள் இருக்கும் எல்லா வீடுகளிலும் தேனை வைத்திருப்பது அவசியம். ஏனெனில், தேன் மூலம் பல நோய்களைக் குணப்படுத்த முடியும்.

70 வகையான வைட்டமின் சத்துக்களைத் தேன் தன்னுள் இயற்கையாகவேப் புதைத்து வைத்திருக்கிறது. ஆனால் கலப்படம் செய்யக்கூடிய பொருட்களில் முதலிடம் வகிப்பது தேன் தான். எனவே நாம் வாங்கும் தேன், சுத்தமானத் தேன்தான் என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டியது நம்முடைய கடமை.
மலையில் உள்ள மரங்களில் இருந்து சேகரிக்கப்படும் தேனில், மூலிகை மருத்துவ குணம் இருப்பதால், மருந்து பொருட்களுடன் சேர்த்து கொடுக்கும்போது ஜீரண பாதையில் மருந்து உறிஞ்சப்பட்டு விடுகிறது. இதனால் இரத்த ஓட்டத்தில் மருந்து விரைவில் கலந்து செயல்படத் தொடங்குகிறது எனவே

எண்ணற்ற நன்மைகள்
விரைவில் செரிப்புத் தன்மையை உண்டாக்கி, மலச்சிக்கலை போக்குகிறது.

குழந்தைகள் தினம்தோறும் தேனை அருந்தினால் கால்சியம் மற்றும் மக்னீசியத்தின் அளவு அதிகமாகி நல்ல வலிமை கிடைக்கும் இதில்

கண் நோய், தோல் நோய்களுக்கும் தேனை பயன்படுத்தலாம்.

வெங்காயச்சாறுடன் தேனை கலந்து சாப்பிட்டால் கண் பார்வை பிரகாசம் அடையும்.

இளம் சூடான வெந்நீருடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து, தேனை அருந்தினால், வாந்தி, குமட்டல், ஜலதோஷம், தலைவலி போன்ற நோய்கள் குணமாகும் மற்றும்

தேனில் உள்ள குளுக்கோஸ் சத்து சிறிய இரத்த நாளங்களை சீராக விரிவடையச் செய்து, ரத்த ஓட்டத்தை சீராக்கும். இதனால் இதயத்திற்கு ஏற்படும் பாதிப்பு தடுக்கப்படும்.

தேன், முட்டை,பால் கலந்து சாப்பிட்டால் ஆஸ்துமா நோயில் சிக்காமல் தப்பலாம்.

மூட்டு வலிகளுக்கு சிறந்த மருந்து தேன். வலி உள்ள இடத்தில் நன்றாகத் தேய்த்து விட வேண்டும்.

தினமும் ஒரு ஸ்பூன் தேன் உட்கொண்டு வந்தால்

மூட்டுகள் வலிக்காது. தேயவும் தேயாது என்றார்.

தேனுடன் இஞ்சி, விதை நீக்கிய பேரிச்சம்பழத்தை ஊற வைத்து சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.

தூக்கம் ஏற்படுவதற்கு தேன் அருமையான மருந்து ஆகும்.

தேனையும் மாதுளம் பழ ரசத்தையும் சம அளவு சேர்த்துத் தினமும் சாப்பிட்டால் இருதய நோய்கள் தீரும். தேனும், சூடான வெந்நீரும் கலந்து சாப்பிட்டால் பருத்த உடல் இளைக்கும்.இப்படித் தேனின் மருத்துவக் குணங்களைப் பட்டிலிட்டுக்கொண்டே செல்லலாம் என்று கூறினார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories