வறுத்த பூண்டை சாப்பிட்டால் இந்த நோயே வராது!

வறுத்த பூண்டை சாப்பிட்டால் இந்த நோயே வராது!

பூண்டு (Garlic) ஒரு சிறந்த உணவு. நல்ல மருந்து, நறுமணப் பொருள் மற்றும் அழகு சாதனப் பொருள் என்பது தெரியும். அதை பல்வேறு விதங்களில் பயன்படுத்தி பலனடைகிறோம். உணவை சமைக்கும் போது உணவுகளில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் பூண்டில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன.

மருத்துவ குணங்கள் (Medicinal Benefits)
பூண்டின் மருத்துவக் குணங்கள் எண்ணற்றவை. இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் எல்லா வகை உணவுகளிலும் பூண்டு சேர்க்கப்படுகிறது. ஆண்கள் பூண்டு சாப்பிட்டால், அவர்களின் பாலியல் ஆரோக்கியம் மேம்படும் எனவே

பூண்டில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும் (Vitamins), அயோடின், சல்பர், குளோரின் என பலவித சத்துக்கள் இருக்கின்றன. பூண்டை சாப்பிடும் விதம், அது கொடுக்கும் நன்மையை தீர்மானிக்கும். பூண்டை பச்சையாக சாப்பிட்டால், உடல் எடை குறையும் (Weight Loss), நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

வறுத்த பூண்டின் நன்மைகள் (Uses of fried Garlic)
பூண்டை வறுத்து சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் (Blood Pressure), அதிக கொலஸ்ட்ரால் ஆகியவை குறையும். இதனால், இதய நோய், மாரடைப்பு, ரத்த நாளங்கள் அடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்கலாம் என்று கூறினார்.

வறுத்த பூண்டை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைவதுடன், ஆரோக்கியமும் மேம்படும். வறுத்த பூண்டு சாப்பிட்ட ஒரு மணிநேரத்தில், அஜீரணமாக இருந்தாலும் கூட உணவு நன்கு செரிமானம் ஆகிவிடும் மற்றும்

வறுத்த பூண்டை தினசரி உண்பதை வழக்கமாக வைத்துக் கொண்டால், உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். உடலில் உள்ள கெட்ட நீர் மற்றும் கொழுப்பு வெளியேறும். கொலஸ்ட்ராலின் அளவை சீராக பராமரிக்கப்படும். வறுத்த பூண்டில் உள்ள ஆன்டி-பாக்டீரியாக்கள் உடல் சோர்வை நீக்குகிறது. மேலும் உடலில் உள்ள செல்களின் வாழ்நாளை நீடிக்கச் செய்கிறது.

வறுத்த பூண்டு சாப்பிட்டால் உடலில் புற்று நோய் ஏற்படும் ஆபத்து (Preventing cancer) குறைகிறது. உடலுக்கு நோய் எதிர்ப்பு மண்டலமாக இருக்கும் பூண்டை சமைத்தும், பச்சையாகவும் சாப்பிடுவது போல, வறுத்தும் சாப்பிட்டுப் பாருங்கள் என்று கூறினார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories