இன்றைய விவசாய பழமொழி

“ஆட்டுப்புழுக்கை அன்றைக்கே ! மாட்டுச் சாணம் மக்குனாதான்!”

ஆடு மற்றும் மாடுகள் விவசாயத்திற்கு மிக முக்கியமானதாக விளங்குகிறது .அதுவும் அக்காலத்தில் விவசாயத்தில் மிக முக்கியமானது உரம். அந்த உரத்தின் மேன்மை பற்றி இங்கு காணலாம்.

முத்து என்பவருக்கு நீண்ட நாட்களாக மனதில் ஒரு யோசனை… விவசாயத்தை மட்டுமே செய்தால் அதிக மகசூல் பெறலாம். ஏன் விவசாயிகள் ஆடு மாடுகளை வளர்க்கின்றனர் என்பது தான் அது. அதை யாரிடமாவது கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்தார்.

ஒரு முறை பேருந்தில் பயணம் செய்யும்போது அருகிலுள்ள பெரியவரை பார்த்தார். அவர் நன்கு அனுபவமுள்ள விவசாயி ஆகத்தான் இருக்க வேண்டும் என அறிந்து ,அந்த பெரியவரிடம் அய்யா எனக்கு நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம் இருந்து வருகிறது.. அதை நீங்கள் எனக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று விரும்புகிறேன் எனக் கூறினார்.

அந்த பெரியவர் கேள் தம்பி உனக்கு சொல்கிறேன் என்றார்.

அவரிடம் முத்து விவசாயிகளின் விவசாயத்தை மட்டும் செய்யாமல் ஆடு மற்றும் மாடுகளை வைத்து கஷ்டப்படுகின்றனர் .இதனால் விவசாயிகள் முறையாக விவசாயத்தை மேற்கொள்ள முடியுமா என்றார்.

ஆடுமாடு இல்லாமல் விவசாயம் செய்வது பிரயோஜனமில்லை என்றார்.

ஆட்டு எருவில் பயிர் வளர்ச்சிக்குத் தேவையான போரான் ,மெக்னீசியம்,கோபால்ட், தாமிரம், துத்தநாகம், மாலிப்டினம் போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளன .மேலும் இந்த எருவில் 60 முதல் 70 சதம் தண்ணீரும், 2 சதம் தழைச் சத்தும், 0.4 சதம் மணிச் சத்தும் ,1.7 சதம் சாம்பல் சத்தும் உள்ளது.

இதற்கு தான் “ஆட்டுப்புழுக்கை அன்றைக்கே ! மாட்டுச் சாணம் மக்குனாதான்!”
என்று கூறுவார்கள்

அந்தக் காலத்தில் ஆட்டுக்கிடை அமைப்பது வழக்கம். ஆட்டுக்கிடை கோடையில் இடலாம் ஆட்டு எருவில் உள்ள சத்துகளின் சீக்கிரமாக சிதைப்பது தாவரத்தின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன.

இதனை கருத்தில் கொண்டு அந்த காலங்களில் வயல்களில் ஆட்டுக் கிடை அமைத்தனர் .இதனால் ஆட்டின் சிறுநீர் மற்றும் சாணத்தின் சத்துக்களை நிலத்திற்கு கிடைக்க செய்கின்றனர். இதன் மேன்மையை உணர்த்தத்தான் “ஆட்டுப்புழுக்கை அன்றைக்கே ! மாட்டுச் சாணம் மக்குனாதான்!”
என விரிவு படுத்தினார்கள்

ஆனால் மாட்டுச் சாணத்தினை நன்கு மக்க வைத்து பிறகு விவசாயத்திற்கு உரமாக பயன்படுத்தலாம். அவ்வாறு மக்கிய எருவின் மேன்மையை தான்மாட்டுச்சாணம் மக்குணத்தான் என்று முன்னோர்கள் கூறியுள்ளார்கள்.

இதன் மேன்மையை இப்போது உணர்ந்து கொண்டேன் இனி விவசாயம் செய்பவர்களிடமும் நானே ஆடு மற்றும் மாட்டின் மேன்மையை எடுத்துச் சொல்கிறேன் என்று கூறினார்.

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories