இயற்கை உரத்திற்காக வயல்களில் செம்மறி ஆடுகளை மேய விடும் விவசாயிகள்!

விவசாயத்திற்குத் தேவையான இயற்கை உரத்திற்காக (Organic Fertilizer), வயல்களில் செம்மறி ஆடுகளை விவசாயிகள் மேய விடுகின்றனர். இதனால், விளைநிலங்கள் இயற்கை விவசாயத்திற்கு ஏற்றதாக மாறிவிடும் என்றார்.

ரசாயன உரம்
திருமருகல் ஒன்றியத்தில் 20 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் குறுவை சாகுபடி பணிகள் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக விவசாயிகள் தங்களது விளை நிலங்களை சாகுபடிக்காக (Cultivation) தயார்படுத்தி வருகின்றனர். குறுவை சாகுபடி பணிகள் தொடங்கிய நிலையில் உரங்களின் பயன்பாடு மிக அவசியமாகிறது. ரசாயன உரங்களின் விலை உயர்வும், தொடந்து பயன்படுத்தப்படும் ரசாயன உரங்களால் மண் வளம் மாறி மகசூல் (Yield) குறைந்து வருவது போன்ற காரணங்களால் இயற்கை முறையிலான சாகுபடிக்கு விவசாயிகள் திரும்பி வருகின்றனர் எனவே

செம்மறி ஆடுகள்
ரசாயன உரங்கள் பயன்பாட்டினை தவிர்க்கும் வகையிலும், இயற்கை உரத்துக்காக வயல்களில் ஆடுகளை மேயவிட்டு அதன் மூலம் கிடைக்கும் எருவை உரமாக்கி வருகின்றனர். இதற்காக ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்து செம்மறி ஆடுகளை திருமருகல் ஒன்றிய விவசாயிகள் வயல்களில் மேய விட்டுள்ளனர். மேலும் இந்த ஆடுகளை வயல்களில் இரவில் ஆடுகளை கிடை போட்டு எரு சேர்க்கின்றனர். இந்த ஆடுகளின் கழிவுகள் மூலம் விளை நிலங்களில் இயற்கை உரம் (Organic Fertilizer) கிடைப்பதுடன், மண் வளமும் அதிகரிக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர் என்றார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories