இயற்கை உரம்: பயறு கரைசல் தயாரிக்கும் முறை!

செயற்கை உரங்களை பயன்படுத்துவதால் பலவிதமான விளைவுகள் ஏற்படும் என்பதால் பலரும் இயற்கை விவசாயத்தை விரும்புகின்றனர். அத்தகைய இயற்கை விவசாயத்தில் பயன்படக்கூடிய உரங்களில் ஒன்றான பயறுகள் கரைசல்பற்றி இங்கு காணலாம்.

இந்த கரைசல் தயாரிக்க தட்டைப்பயறு 100 கிராம், உளுந்து 100 கிராம், பாசிப்பயறு 100 கிராம் ,கோதுமை 100 கிராம் ,கேழ்வரகு 100 கிராம்,இளநீர் 3 லிட்டர் ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த பொருட்களில் உள்ள அனைத்து வகை பயறுகளையும் இருபத்தி நான்கு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். 24 மணி நேரத்திற்கு பிறகு அவற்றை அரைத்து அதனுடன் நீர் சேர்த்து சாறு எடுக்க வேண்டும். மேலும் இதில் 3 லிட்டர் இளநீர் கலந்தால் பயறு கரைசல் கிடைத்துவிடும். நீர், இளநீர் ஆகியவை சேர்த்து கிடைக்கும் கரைசலை 10 லிட்டர் என்ற அளவில் இருக்க வேண்டும்.

பூ பூக்கும் போதும் மற்றும் காய் முற்ற ஆரம்பிக்கும் போதும் இந்த கரைசலைத் தெளிக்கலாம்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories