ஈ.எம் கரைசலைஅதிக அளவிற்கு உறுவாக்கக் கூடிய தொழில் நுட்பம்
தயாரிக்க தேவைப்படும் பொருட்கள்
150 லிட்டர் பிடிக்கக் கூடிய டிரம்; -1
வெல்லம் – 2 கிலோ
ஈ.எம் – 1 லிட்டர்
தண்ணீர் – 97 லிட்டர்
தயாரிக்கும் முறை
வெல்லத்தை நன்றாக துகள்களாக தட்டி டிம்மில் போட்டு 50 லிட்டர் தண்ணீரை ஊற்ற வேண்டும்.
பிறகு ஈ.எம் கரைசல் ஒரு லிட்டரை ஊற்றவும். அடுத்து மீதம் முள்ள தண்ணீரையும் 47 லிட்டரையும் ஊற்றி நன்கு கலக்கி டிரம்மை மூடி வைக்க வேண்டும்.
தினமும் ஒரு முறை மூடியை திறந்து மூடி வைக்க வேண்டும்.
12 நாட்களில் திறன்மிகு நுண்ணுயிர் கரைசல் தயாராகிவிடும்.
அவற்றை 100 லிட்டர் தண்ணீருக்கு 1 லிட்டர் கரைசல் என்ற விகிதத்தில் கலந்து பயிருக்கு தெளிக்கவும்.
தண்ணீர் பாயும் சமையத்தில் ஊற்றியும் விடலாம்.
பயன்கள்
மண்ணில் உள்ள பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்
மகசூல் 20-30 சதம் அதிகரிக்கும்
மண்வளம் அதிகரிக்கும்
நோய் தாக்குதல் இருக்காது
பூக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்
வேர்வளர்ச்சி அதிகரிக்கும்
அனைத்துவகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்