ஒரு டன் தேங்காய் நார் கழிவு ஒன்றரை கிலோ காளான் விதை ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். ஐந்துக்கு மூன்று மீட்டர் என்ற அளவுள்ள நிழலான இடத்தில் தேர்வு செய்ய வேண்டும். முதலில் 100 கிலோ நார் கழிவை நிழலான இடத்தில் பரப்பில்பு ட்டியில் உள்ள காளான் வித்துக்களையும் மேற்பரப்பில் சீராக தூவி விட வேண்டும் .பிறகு மீண்டும் 100 கிலோ நார் கழிவு அதன்மேல் புட்டி காளான் விதைகளைத் தூவவும்.
அதே போல மீண்டும் இரண்டு அ டுக்கில் நார்க்கழிவு மற்றும் காளான் விதையைத் பரப்பிய ஒரு மீட்டர் உயரம் வரையில் தொடர்ந்து அடுக்கி வைத்துக் கொள்ள வேண்டும் .அவ்வப்போதுஅடுக்கு களின் மேல் தண்ணீர் தெளித்து விட வேண்டும். ஒரு மாதம் கழித்து நார்கழிவு மட்கிய கரும் பழுப்பு நிறத்தில் மாறிவிடும்.