பசுஞ்சாணம் 100 கிலோ,15 லிட்டர் மாட்டு கோமியம் ,2 கிலோ வெல்லம், 2 கிலோ( ஏதாவது ஒரு( பயறு மாவு ஆகியவை தேவைப்படும்.
நிழலான இடத்தில் சாணத்தினை பரப்பி அதில் வெல்லம் ,பயறு மாவு ஆகியவற்றை கலந்து அதன்மீது உப்புமா பதம் வருவதற்கு தகுந்தாற்போல கோமியாத்தை தெளித்து பிசைந்து இலேசாக உலர்த்தும் சிறு உருண்டைகளாக உருட்டி சேமிக்கலாம்.
தண்ணீர் குறைவாக உள்ள பகுதிகளில் ஜீவாமிர்தக் அதற்கு பதிலாக இதை பயன்படுத்தலாம்.
காப்பி செடியை எப்படி நடவு செய்வது?
காப்பி பயிரை விதைமூலம் நா ற்றம் காலில் உற்பத்தி செய்து பிறகு நடவு செய்யலாம் .ஜூன்- செப்டம்பர் மாதம் மிகவும் ஏற்ற மாதம் ஆகும்.
விதைகளை விதைக்கும் முன்பு நேர்த்தி செய்து விதைக்கலாம் .
அரை கிலோ சாணத்தை 15 லிட்டர் தண்ணீரில் கலந்து நாற்றங்கால் மீது தெளித்தால் நல்ல விளைச்சல் ஏற்படும்.
பீன்ஸ் செடியை தாக்கும் மஞ்சள் நோய் எப்படி வருகிறது?
வெள்ளை ஈக்கள் பீன்ஸ் பயிர்களில் சாறை உறிஞ்சுவதோடு மட்டுமல்லாமல் மஞ்சள் நச்சுயிரி நோய் பரவுவதற்கு மூல காரணியாக அமைகிறது.
இதை கட்டுப்படுத்த முடியாது. மேலும் நோயின் அறிகுறி தெரிந்த ஆரம்பத்திலேயே செடியை வேருடன் பிடுங்கி அழிக்க வேண்டும். மேலும் இந்த நோயைப் பரப்பும் வெள்ளை தாய் அந்துப்பூச்சி மஞ்சள் நிற ஒட்டுப் பொறிகளை ஏக்கருக்கு 7 என்ற அளவில் வைத்து கவர்ந்து அழிக்கலாம்.
மண் வளம் அதிகரிக்க என்ன செய்யலாம்?
ஒவ்வொரு பயிர் சாகுபடியின் போதும் அந்த மண்ணில் உள்ள சத்துக்களை பயிர்கள் உறிஞ்சி வளரும் இதனால் மீண்டும் மண் வளத்தை மேம்படுத்த வேண்டும்.
மண்ணில் உள்ள சத்துக்களை மேம்படுத்த பசுந்தாள் உரங்களான சித்தகத்தி, தக்கைப்பூண்டு, சனப்பை ,மணிலா அகத்தி ,கொழுஞ்சி, நரிப்பயிறு போன்றவைகளை பயிரிட்டு உழவு செய்யலாம்.
அடர் தீவனம் என்றால் என்ன?
கறவை மாடுகள் மற்றும் எருமை இணைங்களுக்கு தேவையான எரிசக்தி, புரதம், தாது உப்புகள் மற்றும் வைட்டமின்கள் அடங்கிய தீவனம் அடர்தீவனம் எனப்படும் .இதில் தானியம்,பிண்ணாக்கு மற்றும் பயறு வகை, கருணை, தவிடு, தாது உப்பு, சாப்பாட்டு உப்பு போன்ற பொருட்கள் உள்ளன. கறவை ஒன்றுக்கு 400 கிராம் முதல் 500 கிராம் அடர்தீவனம் அளிக்க வேண்டும்.
.