கன ஜீவாமிர்தம் தயாரிக்க என்னென்ன தேவை? எப்படி தயாரிப்பது? .

கன ஜீவாமிர்தம்:

தேவையான பொருட்கள் :

நாட்டு பசும் சாணம்-100 கிலோ,

நாட்டு மாட்டு கோமியம் -15 லிட்டர்,

வெல்லம்-2 கிலோ,

ஏதேனும் பயறு வகை மாவு – 2 கிலோ

தயாரிப்பு முறை :

ஒரு பத்திரத்தில் நாட்டு பசு கோமியம் , பயறுவகை மாவு , வெள்ளம் ஆகியவற்றை நன்றாகக் கரைத்து கொள்ளவும்.

100 கிலோ பசும் சாணத்தை மர நிழலில் பரப்பி கரைத்து வைத்துள்ள கரைசலை அதன் மேல் சமமாக தெளிக்கவும்.

கன ஜீவமிர்த்த படுக்கையை சுற்றி ½ அடி விட்டு சமையலுக்கு பயன் படும் மிளகாய் பொடியை சிறிது துவி விடவும்.

லேசாக உலர்ந்தவுடன் உருண்டையாக்கி சேமிக்கவும். இந்த சேமிப்பு கலவையை பயன்படுத்தும்போது இலேசாக மாட்டுச் கோமியம் அதன் மீது தெளித்து, புட்டு மாவு பதத்தில் பயன்படுத்தலாம்.

பயன்கள் :

நீர் குறைவான இடங்களில் ஜிவாமிர்தம் பதிலாக கன ஜீவாமிர்தம் பயன்படுத்தலாம். ஜிவாமிர்தம் கிடக்கும் அனைத்து பயன்களும் இதிலும் கிடைக்கும் .

 

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories