கம்போஸ்ட் உரம்

கம்போஸ்ட் உரம் தயாரிக்க ஒரு டன் பண்ணை கழிவுகளை 10 பாகங்களாக பிரித்து நிழலான மேட்டுப்பாங்கான இடத்தில் 100 கிலோ கழிவை படுக்கையாக பரப்பி அதன்மேல் 200 கிராம் புளுரோட்டஸ் காளான் வித்தை சீராக இடவேண்டும்

மீண்டும் அதன் மேல் 100 கிலோ பண்ணை கழிவை பரப்பி இரண்டு கிலோ யூரியாவை சீராக இடவேண்டும் அதன் மீது தண்ணீர் மற்றும் சாணிப்பால் தெளித்து கலந்து தெளிக்கவேண்டும் சாணிப்பால் என்பது 20 கிலோ சாணம் மற்றும் 60 லிட்டர் தண்ணீர் கலந்த கலவையாகும்

இதேபோல பண்ணைக்கழிவுகள் பு ரோட்டஸ் காளான் வித்து யூரியா மற்றும் சாணிப்பால் இவற்றை பத்து அடுக்குகள்வரும் வரை மாற்றி மாற்றி அடுக்கி ஈரம் காயாதவாறு தினமும் தண்ணீர் தெளித்து வர வேண்டும்

15 நாட்களுக்கு ஒரு முறை நன்கு கிளறி விட வேண்டும் நன்கு மக்கிய கம்போஸ்ட் உரம் எட்டு வாரங்களில் தயாராகிவிடும்

இந்த உரத்தை மண்ணில் இடுவதால் மண்வளத்தை பாதுகாப்பது மட்டுமின்றி பயிர் வளர்ச்சிக்கு தேவையான பல ஊட்டச் சத்துக்கள் மண்ணில் சேர்க்கப்படுகின்றன. இதனைப் பயன்படுத்தி நல்ல மகசூல் பெறலாம்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories