கரும்பு தோகை தீவனம் தயாரிக்கும் முறை!

 

கரும்பு அறுவடைக்கு பிறகு கிடைக்கும் தொகையை பயன்படுத்தி ஊட்டமேற்றிய கரும்புத் தோகை தீவனம் தயாரித்து விற்பனை செய்து கூடுதல் லாபம் பெறலாம் .பசும்புல் கிடைக்காத காலத்தில் இந்த தீவனத்தை மாடுகளுக்குத் தீவனமாக அளிக்கலாம். இதனால் தீவனச்செலவு குறையும்.அந்த வகையில் கரும்பு தொகை தீவனம் தயாரிக்கும் முறை குறித்து இங்கு காணலாம்.

100 கிலோ கரும்புத் தோகைதீவனம் தயாரிக்க உப்பு ஒரு கிலோ, வெல்லம் 2 கிலோ,பதப்படுத்தப்படும் குழி பாலித்தீன் விரிப்பு பாத்திரங்கள் ஆகியவை தேவைப்படும்.

முதலில் குழி யைதயார்படுத்த தண்ணீர்தேங்காத மேடான இடத்தில் குழி வெட்ட வேண்டும் .குழி யின் உட்பகுதி சீரான அளவில் இருக்க களிமண் கொண்டு மொழுக செய்ய வேண்டும். பிறகு கரும்பு தோகையை சிறு துண்டுகளாக வெட்டி உலர வைத்து எடுத்து குழியில் நிரப்ப வேண்டும். பிறகு இதன் மேல் உப்பு வெல்லக் கரைசலை தெளிக்க வேண்டும். இதன் பிறகு குழியை காற்று புகாமல் மூட வேண்டும்.

இதற்கு முதலில் பாலித்தீன் விரிப்பு கொண்டு குழியில் யிடப்பட்ட தோ கையை மூட வேண்டும். அதன் பிறகு தேவையான அளவு மண் கொட்ட வேண்டும். இதனால் காற்று புகாமல் குழி மூடப்படும். பிறகு 21 நாட்களுக்கு பிறகு எடுத்து தீவனமாக பயன்படுத்தலாம்.

ஒரு ஏக்கரில் விளைவிக்கப்பட்ட கரும்பு தோகையை பதப்படுத்திய தீவனமாக மாற்றம் 12\8 அடி அளவு கொண்ட குழி தேவைப்படும். இந்த குழியில் கரும்பு தோ கையை நன்கு பதப்படுத்தி னால் ஊட்டம் ஏறிய தீவனம் கிடைக்கும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories