பஞ்சகவ்யத்தை இயற்கை முறையில் எளிதாக கிடைக்கும் பொருளைக் கொண்டு தயார் செய்யக்கூடிய ஒரு ஆடர் கலவையாகும். பஞ்சகாவியம் பஞ்ச என்றால் ஐந்து மற்றும் கவ்யம் என்றால் பசுவிடமிருந்து என பொருள்படும். பசுவிடம் இருந்து பெறப்படும் 5 மூலப்பொருட்களை மூலமும் இந்த காவியம் தயாரிக்கப்படுகிறது.
தேவையான பொருட்கள்
பசுஞ்சாணம்-5 கிலோ
பசுவின் கோமியம் 5 லிட்டர்
பசும்பால் இரண்டு லிட்டர்
தயிர் 2 லிட்டர்
நெய் 1லிட்டர்
கரும்புச்சாறு 3 லிட்டர்
இளநீர் 3 லிட்டர்
வெள்ளம் இரண்டு கிலோ
தயாரிக்கும் முறை
பசுஞ்சாணம்5 கிலோவுடன் பசுமாட்டு நெய் ஒரு லிட்டர் கலந்து ஒரு பிளாஸ்டிக் வாளியில் நான்கு நாட்கள் வைத்து தினமும் காலை மாலை இருமுறை இதை பிசைந்து விட வேண்டும்.
ஐந்தாவது நாள் மற்ற பொருட்களுடன் இவைகளை ஒரு வாயகன்ற மண்பானை அல்லது சிமென்ட் தொட்டி அல்லது பிளாஸ்டிக் தொட்டியில் போட்டு நன்கு கரைத்து கம்பி வலை அல்லது நைலான் கொசுவலையை கொண்டு மூடி நிழலில்வைக்க வேண்டும்.
ஒரு நாளைக்கு இருமுறை வீதம் காலையிலும் 20 நிமிடங்கள் கிளறி விட வேண்டும் .இது பிராண வாயுவை பயன்படுத்தி வாழும் நுண்ணுயிர்களின் செயல்திறனை ஊக்குவிக்கிறது. இந்த முறையில் முப்பது நாட்களில் பஞ்சகவ்யம் தயாராகிவிடும்.