பஞ்சகவ்யா பற்றி அனைவருக்கும் சில தகவல் பற்றி தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. இருப்பினும் சில முக்கிய சிறப்புகள் பற்றி இங்கு காணலாம்.
பஞ்சகாவியா என்பது இயற்கை கரைசல் தான்.
பஞ்சகாவியம் என்பது இயற்கை முறையில் எளிதாக வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டு நாமே தயார் செய்யக்கூடிய ஒரு அடர் கலவையாகும்.
பசுவிடம் இருந்து பெறப்படும் 5 மூலப்பொருட்களை மூலம் இந்த காவியம் தயாரிக்கப்படுகிறது. எனவேதான் பஞ்சகாவியம் என்று அழைக்கப்படுகிறது.
பஞ்சகாவியம், பசுஞ்சாணம்-5 கிலோ ,பசுவின் கோமியம்-3 லிட்டர் ,பசும்பால்-2 லிட்டர், தயிர் 2 லிட்டர் ,நெய் ஒரு லிட்டர் ,கரும்புச்சாறு 3 லிட்டர், இளநீர் 3 லிட்டர், வெல்லம் 2 கிலோ ஆகியவற்றை எடுத்துக்கொண்டு பசுசானத்தையும் பசுமாட்டு நெய்யையும் கலந்து ஒரு பிளாஸ்டிக் வாளியில் 4 நாட்கள் வைத்து தினமும் காலை மாலை என இரு முறை இதை பிசைந்துவிட வேண்டும்.
ஐந்தாவது நாள் மற்ற பொருட்களையும் இவற்றுடன் சேர்த்து ஒரு வாயகன்ற மண்பானை அல்லது சிமென்ட் தொட்டி அல்லது பிளாஸ்டிக் தொட்டியில் போட்டு நன்கு கரைத்து கம்பி வலை அல்லது நைலான் கொசுவலையை கொண்டு மூடி நிழலில் வைக்க வேண்டும் .ஒரு நாளைக்கு இரு முறை வீதம் காலையிலும் மாலையிலும் இரு நிமிடங்கள் கிளறி விடவேண்டும். 30 நாட்களில் பஞ்சகவ்யா தயாராகிவிடும்.
இதை தாவரங்களுக்கு அதிகப்படியான வளர்ச்சியையும் மகசூலையும் கொடுப்பது மட்டுமல்லாமல் பயிர்களையும் மரங்களையும் பூச்சி மற்றும் நோய்களிடம் இருந்து பாதுகாத்து இயற்கைக்கு தீங்கு விளைவிக்காத பூச்சிக்கொல்லியை வளர்ச்சி ஊக்கியாகவும் இருக்கும்.
இது கோழி மற்றும் மாட்டிற்கு கூட சிறந்தது.
பஞ்சகாவியம் ஆனது நுண்ணுயிரி, பாக்டீரியா, புரதச்சத்து ,மாவுச்சத்து, கொழுப்புச்சத்து ,அமினோ அமிலங்கள், விட்டமின் ,நொதிப்பொருள், நுண்ணூட்ட சத்து போன்றவை அதிகப்படுத்தும் தன்மையை கொண்டுள்ளது .இதனால் கோழி மற்றும் மாடுகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.