பயிர்பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகிக்கும் வேம்பு தாவரப்பூச்சிக் கொல்லி…

** பூச்சிகொல்லி மருந்துகள் நமக்கும் நிலவாழ் மற்றும் நீர்வாழ் உயிரினங்களுக்கும் கேடுகள் விளைவிக்கின்றன.

** சுற்றுப்புறச்சூழலும் மாசுபடுகிறது.

** ஆதலால் பயிர்பாதுகாப்பில் தாவரப்பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்துவது தற்போது விவசாயிகளிடையே பிரபலமடைந்து வருகிறது.

தாவரப்பூச்சிக் கொல்லிகளில் மிகவும் முக்கியமானது வேம்பு:

** சுற்றுப்புறத்தைத் தூய்மைப்படுத்துவதில் வேம்பிற்கு ஈடான மரம் வேறொன்றும் இல்லை.

**வேப்ப மரத்தின் இலைகள், வேப்பங்கொட்டை, வேப்பம் பிண்ணாக்கு, வேப்பெண்ணெய், வேப்பங்கொட்டைச்சாறு அனைத்தும் விவசாயிகளுக்கு உதவுகிறது.

** வேம்பில் உள்ள அசாடிராக்டின் என்ற இரசாயணப் பொருளே பூச்சிக்கொல்லி தறனுக்கு முக்கிய காரணமாகும்.

** வேம்பு நேரடி பூச்சி கொல்லியாக மட்டுமல்லாமல் பூச்சி விரட்டியாக பூச்சி உணவு குறைப்பானாக பூச்சிகளின் வளர்ச்சித் தடுப்பானாகவும் செயல்படுகின்றது.

** வேப்பங்கொட்டைச்சாறு மேற்கூறியவற்றில் மிகச் சிறப்பாக நெற்பயிரில் புகையான், பச்சைத் தத்துப்பூச்சி, இலை சுருட்டுப்புழு, கதிர் நாவாய்ப்பூச்சி, கதிர் ஈ, பருத்தியில் வெள்ளை ஈ மற்றும் துவரை கொண்டைக்கடலையில் காத்துளைப்பான்களையும் கட்டுப்படுத்தவல்லது.

எப்படி தயாரிக்கலாம்:

** வேப்பங்கொட்டையை உடைத்து வேப்பம் பருப்பு எடுக்க வேண்டும்.

** பருப்பைத் தூள்செய்து 50 கிராம் பருப்புத் தூளிற்கு 1 லிட்டர் நீர் என்ற விகிதத்தில் நீர் கலந்து 12 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

** பிறகு வடி கட்டி, ஒரு லிட்டர் வடிகட்டிய திரவத்துடன் 1 மிலி டீபால் என்ற அளவில் கலந்து கரசலை வயலில் தெளிக்க வேண்டும்.

** ஒரு ஏக்கருக்கு 12.5 கிலோ வேப்பம் பருப்பும் 200 லிட்டர் தண்ணீரும் 200 மிலி டீ பால் அல்லது 2 பார் காதி சோபொ தேவைப்படும்.

 

 

 

 

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories