பயிர் தாவர ஊக்கி மைக்கோரைசாவின் நன்மை

பயிர் தாவர ஊக்கி மைக்கோரைசாவின் நன்மை
மைக்கோரைசா என்றால் என்ன,
இது ஒரு பயன் அளிக்கக கூடிய வேர் பூஞ்சாணம். இந்த
பூஞ்சாணம் பயிரின் வேரையும், மண்ணையும் இணைத்து மண்ணில் இருக்கக் கூடிய சத்துக்களையும் (அதாவது நேரடியாக பாஸ்பரசையும், மறைமுகமாக நைட்ரஜன், பொட்டாசியம், மற்றும் மெக்னீசியம், இரும்பு, ஜிங், மாங்கனீசு சத்துக்களையும் ) நீரையும் உறிஞ்சக்கூடிய
தன்மையை கொண்டது. இந்த பயன் அளிக்கக் கூடிய வேர்
பூஞ்சாணம் (மைக்கோரைசா) உழகத்திலுள்ள பயிர் மற்றும் தாவர வகைகளில் 95 சதம் நெருக்கமான உறவை கொண்டுள்ளது.
மைக்கோரைசாவின் நன்மை
வேர்களுக்கும் மண்ணில் உள்ள சத்துக்களையும், நீரையும் உறிஞ்சும் சக்தியை அதிகப்படுத்துகிறது. பயிர் நன்றாக வளர ஏற்ற மண்வளத்தையும், சூழ்நிலையும் உண்டாக்குகிறது. நாற்றங்காலில் இருந்து மாற்றி நடும் போது ஏற்படக்சூடிய பயிர் எண்ணிக்கை இழப்பை குறைக்கிறது.
உரத்தின் அளவை குறைக்கிறது. அதன் மூலம் உரச்செலவை குறைக்கிறது. மண்ணில் உள்ள நோய் உண்டாக்கக் கூடிய பாக்டிரியா மற்றும் பூஞ்சாணம் போன்றவற்றை எதிர்க்கும் சக்தி பயிர்களுக்கு அதிகரிக்கிறது.
a காய்கறி பயிர்கள், பழவகைகள், மரக்கன்றுகள்,தென்னை, மலைத்தோட்டப்பயிர்கள் மற்றும் எல்லா வகை வேர்உட்பூசனம் கறையாத நிலையில் உள்ள நுண்ணூட்ட சத்து மற்றும் மணிச்சத்தை பயிர்களின் வேர்களில் வளர்ந்து எடுத்துக் கொடுக்கும்
வேரைத் தாக்கும் பூஞ்சான நோய்களில் இருந்து பயிரை பாதுகாக்கிறது, வேர்களுக்கு மண்ணிலிருந்து நீரை எடுத்துக்கொடுக்கிறது மகசூல் 10 மதல் 15 சதம் அதிகரிக்கிறது
10.வேம்மை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாமா?
ஒரு சதுர மீட்டர் நிலப்பரப்பிற்கு 100 கிலேர் வேம் உயிர் உரத்தை விதைப்பதற்கு முன் நாற்றங்காலில் கிழே 2-3 செ.மீ ஆழத்தில் இடவும். வளர்ந்தபயிருக்கு 50 முதல் 200 கிராம் வேமை வேர்பாகத்தில் இட்டு மண் அணைக்கவும். பாலித்தீன் பையில் உள்ள நாற்றுக்களுக்கு ஒரு பைக்கு 10 கிராம் உட்பூசனம் போடவும், 1000 கிலோ மண்கலவையில் 10 கிலோ வேம் கலந்து பாக்கெட்டில் இடலாம்.
வேம் – (மைக்கோ ரைசா)
5 மீட்டர் சுற்றளவில் உள்ள நீரை உறிஞ்சி பயிருக்கு எடுத்துக் கொடுக்கும்.ஈர்ப்பு சக்தி உள்ளது வறட்சியை தாங்கி வளரும்.
கரையாத நிலையில் உள்ள நுண்ணூட்ட சத்து, மணிச்சத்து பயிர்களின் வேரில் வளர்ந்து பயிருக்கு எடுத்துக்கொடுக்கும்
வேரைத் தாக்கும் பூஞ்சாண நோயைத் தடுக்கும்
15 முதல் 20 சதவீதம் மகசூல் கூடும்
நாற்று நேர்த்தி செய்ய, இலைவழியாக தெளிக்க, ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10கிராம் பயன்படுத்தலாம். அதே அளவில் கலந்து
தண்ணீர் பாயும் பொழுதும் ஊற்றி விடலாம்
அடியுரமாக ஒரு ஏக்கருக்கு 2 கிலோ மக்கிய தொழுவுரம் 100 கிலோவில் கலந்து வயலில் ஈரம் இருக்கும் பொழுது போடலாம்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories