பூச்சிகளின் தாக்குதலை கட்டுப்படுத்தப் பயன்படும் ஒரு இயற்கை பூச்சிவிரட்டி ஆகும். இதற்கு நொச்சிஇலை 10 கிலோ வேப்ப இலை3கிலோ புளியம் இலை 2 கிலோ ஆகியவற்றுடன் 10 லிட்டர் கோமியம் கலந்த மண் பானையில் இட்டு கொதிக்க வைக்கவேண்டும் . மீண்டும் கொதிக்க வைக்கவேண்டும் இவ்வாறு நான்கு முறை கொதிக்க வைக்கவேண்டும். பிறகு பானையின் வாய் பகுதியை துணியால் கட்டி 48 மணி நேரம் வைத்திருக்க வேண்டும் அதன் பிறகு இந்த நீரை உபயோகப்படுத்தலாம்.
ஒரு ஏக்கருக்கு 100 லிட்டர் நீரில் இரண்டரை லிட்டர் பிரம்மாஸ்திரம் மற்றும் 3 லிட்டர் கோமியத்தை கலந்து தெளிக்க வேண்டும்.