மகசூலை 20% அதிகரிக்கும் திரவ உயிர் உரங்கள் பற்றி தகவல்!

விவசாயிகள் திரவ உரங்களைப் பயன்படுத்தி மண் வளத்தைக் காக்க கைகொடுக்குமாறு செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகளை வேளாண்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

ரசாயன உரங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு ஏற்றவாறு, மண்ணின் வளம், நிலத்தடி நீரின் தன்மை, சுற்றுச்சூழல் உள்ளிட்டவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே மாசுபாட்டில் இருந்து இயற்கையை மீட்டெடுக்க திரவ உயிர் உரங்களின் பயன்பாடு அவசியமானதாகும்.

வேளாண் விரிவாக்க மையங்களில் திரவ உயிர் உரங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இரசாயன உரங்களைத் தவிர்த்து, இதனை பயன்படுத்தும் பொருட்டு, மண் வளம் அதிகரித்து மகசூல், 15 முதல் 20 % அதிகரிக்கிறது. எனவே இயற்கை முறையில் விவசாயம் செய்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் ஆகும்.

தென்னை , வாழை, காய்கறி, நிலக்கடலை மற்றும் பயறு வகைப்பயிர்களில் சொட்டு நீர் பாசனம் அமைத்திருக்கும் விவசாயிகள் இதனை சொட்டு நீர் பாசனத்துடன் கலந்து பயன் பயன்படுத்தலாம்.

500 மில்லி திரவ உயிர் உரம் அசோஸ்பைரில்லம், ரைசோபியம், பாஸ்போபாக்டீரியா மற்றும் திரவ வாட்டாஸ் உரம் அனைத்தும் ரூ.150-க்கு கிடைக்கின்றது.

நீர் வழி உரமிடல் (Water way composting)
ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 மில்லி திரவ உயிர் உரம் என்ற அளவில் பயன்படுத்தலாம்.

விதை நேர்த்தி (Seed treatment)
ஒரு ஏக்கருக்கு தேவையான விதையுடன் 50 மில்லி கலந்து நிழலில் உலர்த்தி விதைக்கலாம் என்றார்.

வயலில் இடுதல் (Putting in the field)
ஏக்கருக்கு 200 மில்லி திரவ உயிர் உரத்தை மக்கிய தொழு உரத்துடன் கலந்து வயலில் இடலாம் என்று கூறினார்.

கூடுதல் விபரங்களுக்கு அருகில் உள்ள வேளாண்மைவிரிவாக்க மையங்களை விவசாயிகள் அனுகலாம் என்றார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories