மக்கிய உரம் தயாரிக்கும் முறைகள்!

விவசாயத்தில் லாபம் அடைவதற்கு உரங்களுக்கு செலவிடும் அளவை குறைத்துக் கொள்ளுதல் வேண்டும். உரங்களை எவ்வித செலவும் இல்லாமல் நாமே தயார் செய்தல் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும் .அந்த வகையில் உர செலவை குறைக்க மக்கிய உரம் எப்படி தயார் செய்யலாம் என்பதை காணலாம்.

உரச் செலவை குறைக்கும் பயிர் கழிவுகளை மக்கிய உரமாக (கம்போஸ்ட் ( மாற்றி பயன்படுத்தலாம். கம்பு, தட்டை, வைக்கோல் , வைக்கோல், கேழ்வரகு தாள் ,மரத்தூள், பண்ணைக் கழிவுகள் ,நகரக் கழிவுகளை இந்த வகையில் கம்போஸ்ட் உரமாக மாற்றலாம்.

மக்கிய உரம் தயாரிக்க 15 அடி நீளம், 8 அடி அகலம், 2 அடி ஆழம் கொண்ட குழியெடுத்து அதில் கழிவுகளை 9 அங்குலம் அடுக்குகளாக பரப்பிவிட வேண்டும். ஒவ்வொரு அடுக்கிலும் பசும் சாணத்தை கரைத்து தெளிக்க வேண்டும் .பிறகு ஒரு கிலோ சூப்பர் பாஸ்பேட் உரத்தை தூவ வேண்டும். குழி முழுவதும் நிரப்பிய நில மட்டத்திற்கு மேல் 2 அடி வரும் கழிவு பொருட்கள் குழியை நிரப்ப வேண்டும். 15 நாட்களுக்கு திறந்த நிலையில் வைத்திருந்து அதன் பின்னர் மண் போட்டு மூடிவிட வேண்டும் .குழியில் நடுப்பாகம் உயர்ந்தும், பக்கங்கள் சரிவாக இருந்தால் மழைநீர் தேங்கி நிற்காமல் ஓடிவிடும் .குழியைச் சுற்றி பசுந்தழை கொடுக்கும் மரங்கள் அல்லது செடி கொடிகள் வளர்ப்பது நல்லது. இந்த முறையில் கழிவுகள் நான்கு முதல் ஆறு மாதங்களில் நன்கு மட்கி உரமாகி விடும்.

இந்த உரம் நிலத்தில் மன்னனை பொலபொலப்பாக வைத்திருந்து பயிர்கள் இலகுவாக வளர உதவுகிறது. மண்ணில் நுண்ணுயிர்களின் வளர்ச்சியை பெருகுகிறது .மண்ணின் வளத்தை அதிகரித்து பயிருக்கு தேவையான காற்றோட்டமும் , வேர்களுக்கு உகந்த சூழலை ஏற்படுத்துகிறது. கழிவுப் பொருள்கள் நிலத்தில் மேலும் மக்கும் போது கலைகளும் நோய் கிருமிகளும் அழிக்கப்படுகின்றன.

இதில் தழைச்சத்து 0.4 முதல் 0.8 சதவீதம், மணிச்சத்து 0.025 முதல் 0.15 சதவீதம், சாம்பல் சத்து 0.7 முதல் 10.0 சதவீதம் மற்றும் நுண்ணூட்டங்கள் உள்ளன.

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories