மலர் வகைகளுக்கு எவ்வளவு உரம் இடவேண்டும்

குறுகிய கால மலர் வகைகளான செவ்வந்தி, மரிக்கொழுந்து, மருகு, வாடாமல்லி, கோழிக்கொண்டை போன்றவற்றிற்கு அடியுரமாக ஏக்கருக்கு 250 கிலோ மண்புழு உரத்தை இடலாம்.

நீண்டகால மலர் வகைகளான மல்லிகை, ரோஜா, முல்லை ,காக்கட்டான், சம்பங்கி, கனகாம்பரம் ,அரளி போன்றவற்றிற்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும் செடி ஒன்றுக்கு 250 கிராம் மண்புழு உரத்தை இட்டு வந்தால் நல்ல விளைச்சல் கிடைக்கும்.

மண்புழு உரம் இடுவது என்பது மண்ணிற்கு ஏற்ப மாறுபடும். மேலே குறிப்பிட்டவை பொதுவான அளவு ஆகும்.

மண்புழு உரத்தை அதிகம் இட்டாலும் தவறில்லை பலன் கிடைக்கும்.

மேலே குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு மண்புழு உரம் இட வேண்டிய அவசியம் இருக்காது .பண்ணைக் கழிவுகளை மட்டும் நிலத்தில் போட்டு வந்தால் போதுமானது.

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories