மண்புழு உரத்திற்கு ஆழ்குழாய் கிணறு டன் கூடிய நிழல் பாங்கான இடம் வேண்டும் .இந்த இடத்தில் கழிவுகளை மட்க செய்யும் மண்புழு உர தயாரிப்புத் தொட்டியை அமைக்க வேண்டும். தொட்டியில் தேங்கும் நீரை வெளியேற்றும் வகையில் சிறிய துளை கொண்ட கழிவு நீர் வெளியேற்றும் வசதி இருக்க வேண்டும். தொட்டி அதிகபட்சமாக 15 மீட்டர் அளவுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
நல்ல தரமான மண்புழு உர உற்பத்திக்கு சரியான அளவில் ஈரப்பதத்தை நிலை நிறுத்த வேண்டும். அதிகப்படியான ஈரப்பதம் வெப்பத்தை அதிகப்படுத்தி மண்புழுக்கள் கொன்று விடாமலிருக்க மண்புழு உரத் தொட்டி கழிவுநீர் வடிகால் வசதி அமைக்கப்பட வேண்டும்.
மண்புழு உரம் தயாரிப்பு செயல்பாடு நடைபெறும் நிலையில் தொட்டியில் கோடைகாலங்களில் தினமும் நீர் தேக்கப்பட வேண்டும் .மண்புழு உர தொட்டிகளில் எறும்பு,எலி , கரையான்களை போன்றவைகளில் இறங்கி சேதப்படுத்தாமல் இருக்க வேம்பு கலந்த பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தலாம் .நன்கு பராமரிக்கப்பட்ட உரமானது 60 முதல் 70 நாட்களில் தயாராகிவிடும்.