5 லிட்டர் பஞ்சகாவ்யா தயாரிப்பதற்கான அளவு

 

சாணம் 1கிலோ, கோமியம்-3 லிட்டர் ,பால் 2 லிட்டர் ,தயிர் 2 லிட்டர், சர்க்கரை ஒரு கிலோ இவற்றை ஒருசேர கலக்கி மர நிழலில் வைத்து காலை மாலை என தினமும் கலக்கி வர ஏழாவது நாள் பஞ்சகவ்யா தயாராகிவிடும், இதை 10 லிட்டர் தண்ணீருக்கு 200 மில்லி லிட்டர் கலந்து தெளித்து பாசனத்தில் கலந்து விடலாம்.

10 சென்டில் மல்லிப்பூ நடவு செய்ய எத்தனை செடி தேவை.

875 செடிகள் தேவைப்படும்.

அடுத்த முறை பயிரிடும் மிளகாய் விதைகளை இயற்கை முறையில்எவ்வாறு பக்குவப்படுத்தி வைத்துக் கொள்வது.

மிளகாய் விதைகளை சாம்பலில் கலந்து வைத்துக் கொண்டால் பாதுகாக்கலாம்.

முட்டை எலுமிச்சை கரைசலை இலைவழியே மட்டும் அளிப்பது தான் சிறந்தது.

ஒரு ஏக்கருக்கு சூரியகாந்தி விதை எவ்வளவு நடவு செய்யலாம்.

மானாவாரி நிலங்களில் ஏக்கருக்கு 7 கிலோ இரவை நிலங்களில் ஏக்கருக்கு 6 கிலோ விதை தேவைப்படும்.

சின்ன வெங்காய பயிரில் வேர் அழுகல் உள்ளது என்ன செய்வது. 60 நாள் பயிர்இது

நடவு செய்த 30 நாளில் டிரைகோடெர்மா விரிடி என்ற உயிர்ப்புசாணத்தையும்எக்டருக்கு 5 கிலோ வீதம் 100 கிலோ மக்கிய தொழு உரத்துடன் கலந்து இடவேண்டும். நோய் தாக்கிய செடிகளை வேரோடு பிடுங்கி எடுத்து விட்டு அந்த இடத்தில் டிரைகோடெர்மா விரிடி மூன்று கிராம் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து ஊற்ற வேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories