இயற்கை உரங்களைப் பற்றி ஒரு கண்ணோட்டம்

இயற்கை உரங்களைப் பற்றி ஒரு கண்ணோட்டம்
இயற்கை உரங்களை நிலத்தில் பயன்படுத்தும் பொழுது நிலத்தில் உள்ள நுண்ணுயிரிகள் வளர்ச்சி அதிகரிக்கும் மற்றும் மண்ணின் வளம் அதிகமாகும.; எந்தெந்த பொருட்களை இயற்கை உரமாக பயன்படுத்தினால் மண்ணின் வளம் காக்க முடியும் என்பதை பார்ப்போம்.
தொழு உரம்
தொன்று தொட்டு பயன்படுத்தி வரும் இயற்கை உரங்களில் ஒன்று தொழுவுரம். சாணம் போன்ற விலங்;கின கழிவுகள் தாவங்கள் செடி கொடிகளை குழியில் இட்டு மட்கவைத்த பயன்படுத்துவதை தொழுவுரம் என்று கூறுகிறோம். தொழுவுரம் தயாரிப்புக்கு ஒரு வரையறை கிடையாது அதனால் அதன் தரம் அதில் பயன்படுத்தப்பட்ட மூல பொருட்களை கொண்டு மாறுபடும். தொழுவுரத்திற்கு மக்கவைக்கும் வேறுபாடுகள் அதிகமாக இருக்கலாம். முழுமையாக மட்கவைக்காத தொழுவுரத்தில் தீமைசெய்யும் நுண்ணுயிரிகள், களைவிதைகள் போன்றவை காணப்படலாம்.
கம்போஸ்ட்உரம்
கம்போஸ்ட் உரம் என்பது மட்ககூடிய பொருட்களை ஒன்று சேர்த்து அதில் மட்கவைக்கும் நுண்ணுயிரிகளை விட்டு மட்குவதற்கு தேவையான தட்பவெப்ப சூழ்நிலைகளை ஏற்படுத்தி விஞ்ஞான ரீதியில் மட்கசெய்து கிடைக்கும் இறுதி பொருளாகும். இந்த கம்போஸ்ட் உரத்தில் தரம் பெரும்பாலும் சீராக இருக்கும். தொழிற்சாலைகளில் மற்றும் நகரங்களில் உற்பத்தி ஆகும் மட்ககூடிய கழிவுகளை வீணாக்காமல் இந்த முறையில் கம்போஸ்ட் தயாரித்து நல்ல ஒரு இயற்கைவுரமாக பயன்படுத்த முடியும். மண்புழு உரம் கூட ஒருவகையான கம்போஸ்ட் உரமாகும்
இயற்கை கழிவு பொருட்கள்
இயற்கையில் கிடைக்கக் கூடிய சில கழிவு பொருட்களை நேரடியாக இயற்கை உரமாக பயன்படுத்த இயலும். எண்ணெய் வித்து புண்ணாக்குகளை நல்ல ஒரு இயற்கை உரமாக பயன்படுத்த முடியும். அது போல் சாம்பல் எலும்புத்தூள் மீன்கருவாடு கழிவுகள் போன்றவற்றை இயற்கை உரமாக பயன்படுத்தலாம். அது மட்டுமல்லாமல் இயற்கையில் கிடைக்கக் கூடிய சிலவகை கனிமங்;கள் உதாரணத்திற்கு ராக்பாஸ்பேட் ஆற்று வண்டல்மண் போன்றவற்றை இயற்கை உரமாக பயன்படுத்தும் போது நல்ல பலனை பெற முடியும்.
மேலே உள்ள அனைத்து உரங்களிலும் உயிர் உரங்கள் கலந்து ஊட்டமேற்றி போட்டால் பயிரில் எந்தவித மான நோய் தாக்குதல் , பூச்சி தாக்குதல் ,வர வாய்ப்பில்லை நாம் தொடர்ந்து 20 நாட்களுக்கு ஒரு முறை கலந்து பயன்படுத்தலாம் காய் வரும் பயிராக இருந்தால் காய் பரித்தவுடன் திரும்ப தண்ணீர் பாய்ச்சிவிட்டு இந்த உரங்களை போடலாம் அதுமட்டும் இல்லாமல் இவற்றில் பஞ்சகவ்யா, அமிர்தக்கரைசல், ஹீயூமிக் , ஈயம் கரைசல் மோர்க்கரைசல் இவற்றையும் கலந்து ஊட்ட மேற்றி பயன்படுத்தலாம் பயிர் மிகவும் நன்றாக இருக்கும் இயற்றை உயிர் உரங்களுடன் கலந்தும் போடலாம்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories