இயற்கை களைக்கொல்லி தயாரித்து எத்தனை நாள் இருப்பு வைக்கலாம்.

களைக் கொல்லிகளை தயாரித்த ஒரு நாட்களுக்குள் தெளித்து விட வேண்டும். இதனால் கலவையின் வீரியம் குறையாமல் நல்ல பலன் கொடுக்கும்.

மாட்டிற்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உள்ளது எப்படி சரி செய்வது?

சுக்கு 10 கிராம், உலர்ந்த நெல்லிக்காயை 20 கிராம் ,சர்க்கரையை 20 கிராம் இந்த மூன்றையும் 6 லிட்டர் நீருடன் கலந்து ஒரு நாளைக்கு இரு முறை கொடுக்கலாம். பிரச்சனை ஏற்படும் சிறிய கால்நடைகளுக்கு ஒரு வாழைப்பூ பெரிய விலங்கிற்கு மூன்று வாழை பூ கொடுத்து சரிசெய்யலாம்.

பழம்பாசி இலை ஒரு கைப்பிடி அளவு ,வேப்பங்கொழுந்து கைப்பிடி அளவு எடுத்து அதனுடன் சின்ன வெங்காயம் 5 முதல் 7 என்ற எண்ணிக்கையில் எடுத்து இரண்டையும் நன்றாக அரைத்து மாட்டிற்கு கொடுக்க வேண்டும்.

கத்தரி நடவு செய்து 10 நாள் ஆகிறது .ஆனால் வளர்ச்சி குன்றி உள்ளது.

நன்கு நீர் பாசனம் செய்ய வேண்டும்.

வீட்டுத்தோட்டத்தில் பூசணிக்காயை நன்கு வளர என்ன செய்ய வேண்டும்.

தகுந்த கால இடைவெளியில் நீர் ஊற்ற வேண்டும் .வாரம் ஒரு முறை ஒரு லிட்டர் நீரில் இருநூறு மில்லி பஞ்சகாவ்யா கரைசல் தெளித்து வேர்ப்பகுதியில் ஊற்றி வரவேண்டும். இதனால் காய்கள் நன்கு வளரும்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories