உர விற்பனை நிலையங்களுக்கு அதிரடி உத்தரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலையங்கள், ஒரே நபரின் பெயரில் அதிகப் படியாக விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சில்லரை விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திடீர் ஆய்வு (Sudden study)
மதுரை மாவட்டத்தில், வேளாண்மை இணை இயக்குநர் த.விவேகானந்தன் ஆலோசனையின் பேரில் மேலூர் மற்றும் கொட்டாம்பட்டி வட்டாரங்களில் செயல்பட்டு வரும் உர விற்பனை நிலையங்களில் வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் வேளாண்மை அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர் இதில்

அதிரடி ஆய்வு (Action study)
ஆய்வின் போது உர விற்பனை நிலையங்களில் இருப்பு மற்றும் விலை விபரப்பட்டியல், கொள்முதல் பட்டியல்கள், இருப்புப் புத்தகம், உர இருப்பு மற்றும் விற்பனை இரசீது ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது.

விற்பனைக்குத் தடை (Prohibition on sale)
மேலும், அசல் இருப்பிற்கும், புத்தக இருப்பிற்கும் வேறுபாடு இருந்ததால் 3550 கிலோ உரங்களுக்கு விற்பனைத் தடை விதிக்கப்பட்டது என்றார்.

உர மாதிரிகள் சேகரிப்பு (Collection of fertilizer samples)
மேலும் இருப்பில் இருந்த உரங்களிலிருந்து, தரப்பரிசோதனைக்காக உர மாதிரிகள் சேகரிக்கப் பட்டன எனவே

எழுதி வைக்க வேண்டும் (To be written down)
ஒவ்வொரு உர விற்பனை நிலையத்திலும் உர இருப்பு மற்றும் விலை விபரங்களை விவசாயிகளின் பார்வைக்குப் படும்படி, எழுதி வைக்க வேண்டும்.

உரிமம் ரத்து (License revoked)
ஒரே நபரின் பெயரில் அதிகப் படியாக விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சில்லரை விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும்.

விற்பனை கூடாது (Not for sale)
மொத்த உர விற்பனையாளர்கள் வெளி மாவட்டங்களுக்கு உரங்களை மாற்றம் செய்யவோ, விற்பனை செய்யவோ கூடாது. விவசாயம் செய்யாத நபர்களுக்கு உரங்களை விற்பனை செய்யக்கூடாது. விவசாயிகள் உரம் வாங்கச் செல்லும் போது, ஆதார் அட்டையுடன் செல்ல வேண்டும்.

கடும் நடவடிக்கை (Heavy action)
மேலும் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்பனை செய்தாலோ, உரிய உரிமம் இன்றி விற்பனை செய்தாலோ, நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லரை விலைக்கு மேல் பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்பனை செய்தாலோ அவர்கள் மீது பூச்சிக்கொல்லி மருந்து சட்டப்படி, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

புகார் தெரிவிக்க (Report a complaint)
உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து விலை மற்றும் தரம் குறித்து புகார் இருந்தால், இருப்பின் வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு – 97516 23274 மற்றும் வேளாண்மை அலுவலர் (தரக்கட்டுப்பாடு – 98940 65925 ஆகியோர்களைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று கூறினார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories