பயிர் வளர்ச்சிக்கு தேவையான தழைச்சத்தை தரும் நுண்ணுயிரிகளில் அசோஸ்பைரில்லம் பெரும்பங்கு வகிக்கிறது. உர உயிரிகள் என அழைக்கப்படும் இவை தாவரங்களுக்கு சத்துகள்,அமினோ அமிலங்கள் வளர்ச்சி ஊக்கிகள் போன்றவற்றை அளிக்கின்றன.
நுண்ணுயிரிகளில் ரைசோபியம், அசோஸ்பைரில்லம் ,அசெடோபாக்டர், நீலப்பச்சை பாசி , அசோலா போன்றவை முக்கியமானவை. இந்த நுண்ணுயிரிகள் சேர்ந்த கலவையை நுண்ணுயிர் உரங்கள் என்கிறோம்.
உயிரி உரங்கள் பயறுவகைப் பயிர்களுக்கு இதர பயிர்களுக்கும் மாறுபடுகின்றன .இதில் அசோஸ்பைரில்லம் சிறப்பு கொண்டது.
மண்ணில் வாழும் அசோசபயரில்லம் தன்மை காற்றில் உள்ள தழைச்சத்தை கிரகித்து பயிர்களுக்கு அளிப்பதே ஆகும்.
அசோஸ்பைரில்லம் தழைச்சத்தை நிலைப்படுத்துவதற்கு வேண்டிய சக்தியை மண்ணின் அங்கக பொருட்களிலிருந்து பெறாமல் பயரின் வேறு வழியாக கிடைக்கும் உணவில் இருந்தே பெற்றுக் கொள்கிறது.
மண்ணில் அங்கக பொருட்கள் அதிக அளவில் இல்லாத இடங்களிலும் இந்த நுண்ணுயிரி செயல்படும் தன்மை கொண்டது.