தென்னைக்கு ஊட்டமேற்றிய உரம் எப்படி தயாரித்து இடலாம்?

350 கிலோ மாட்டு எரு தலா 50 கிலோ அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா ,சூடோமோனஸ் ஆகியவற்றை கலந்து தினமும் ஈரப்பதம் இருக்கும்படி தண்ணீர் தெளித்து45 நாட்கள் வைத்தால் மேம்படுத்தப்பட்ட மாட்டு எரு தயார்.

இதை தென்னை ஒன்றுக்கு 15 மாதங்களில் ஒரு கிலோ வீதம் கொடுக்கலாம்.
தென்னைக்கு எப்போது உரமிடுவது?

தென்னைக்கு மண்ணில் ஈரப்பதம் போதுமானதாக உள்ள நிலையில் உரமிடல் வேண்டும்.

மேலும் நீர் பாசன வசதி கொண்ட நிலைகளிலும் உரத்தை மூன்று அல்லது நான்கு தடவைகள் சம பங்குகளாக பிரித்து ஏப்ரல் -மே ஆகஸ்டு -செப்டம்பர் டிசம்பர் மற்றும் பிப்ரவரி- மார்ச் மாதங்களில் விடலாம்.

தென்னைக்கு முன்னோட்டம்உரத்தினை எப்படி இடவேண்டும்?
தெ ண்ணைக்கு மாதமொருமுறை மரம் ஒன்றுக்கு ஒரு கிலோ தென்னை நுண்ணூட்ட உரத்தை மரத்தைச் சுற்றியும் ஐந்தடி தூரத்தில் இட்டு மண்ணை கிளறி விட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

இப்படி மாதம் ஒருமுறை உரங்களையும் பராமரித்து வந்தால் வளர்ச்சி நன்றாக இருக்கும். குரும்பை உதிர்தல், காய்களில் வெடிப்பு, நீல வடிவிலான வெற்று காய்கள்பிரச்சனைகளும் உண்டாகாது.

தென்னைக்கு உரமிட மாற்று வழி ஏதாவது உண்டா?
தென்னைக்கு உரமிட அதற்கு பதிலாக பசுந்தாள் உரப் பயிர் (சணப்பு ,அவுரிமற்றும் தக்கைபூண்டு நிலத்திலேயே வளர்த்து பூப்பூக்கும்பருவத்தில் அவற்றை மடக்கி உழுது விடலாம்.

தென்னைக்கு மீன் அமிலத்தை எப்படி கொடுக்கலாம்?

தென்னைக்கு மீன் அமிலத்தை வேர் வழியாக கொடுக்கலாம்.

தென்னையில் வெளிர் மஞ்சள் நிற வெறி தேர்வு செய்த ஒரு பாலிதீன் கவரில் 10 மில்லி மீன் அமிலத்தை 100 மில்லி தண்ணீரில் கலந்து மரத்தின் எதிரே இரண்டு பேர் வேர்ப்பகுதியில் பகுதியில் கட்டி விட வேண்டும்.

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தென்னை மரத்திற்கு 200 மில்லி மீன் அமிலத்தை வேர் மூலம் கொடுப்பதால் நுண்ணூட்டச்சத்து குறைபாடு நீங்கி மரங்கள் செழிப்பாக வளர்ந்து அதிக விளைச்சல் கொடுக்கும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories