தென்னைக்கு சொட்டுநீர்ப் பாசனம் சிறந்த முறையா?

தென்னைக்கு சொட்டுநீர்ப் பாசனம் மிக உகந்த பாசனம் முறையாகும். இம்முறை நீரை அளவு ஆட்களின் தேவை மற்றும் ஆற்றலின் அளவை குறை க்கிறது.

சொட்டு நீர் பாசனத்தின் மூலம் 30 முதல் 40 சதவீத நீரைச் சேமிப்பது ஒரு ஆற்றுப் பாசனத்தை ஒப்பிடுகையில் 30 முதல் 40 சதவீதம் அதிக மகசூலை பெற முடியும்.

பயிர் காப்பீடு செய்வதால் என்ன பயன்?

ப யிர் இழப்பு ஏற்படும் போது விவசாயிகளுக்கு நிதி உதவி அளித்து அதன் மூலமாக பயிர் உற்பத்தியை அதிகரிக்கிறது.

விவசாயிகளை முற்போக்கான சாகுபடி முறைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட நவீன தொழில் நுட்பங்களை உபயோகக்ப்படுத்த ஊக்குவிக்கிறது.

விவசாய கடன் வழங்கும் முறையினை தடையின்றி வைத்திருக்க உதவுகிறது.

வறட்சியில் இருந்து பயிர்களை எப்படி பாதுகாக்கலாம்?

தாவர பகுதிகளில் பயன் தரக்கூடிய பகுதியில் தவிர மீதமுள்ளதட்டடை மற்றும் வைக்கோல் போன்ற பயிர் கழிவுகளை அதே நிலத்தில் மறுசுழற்சி செய்வதாள் நிலத்தின் உயிர்த்தன்மை இயற்கை கரி ப்பொருளினை அதிகரிப்பதோடு மண்ணரிப்பை குறைத்து நீர் மற்றும் உர ச்சத்து அதிகரித்து வ ரட்சியில் இருந்து பயிர்களை பாதுகாக்க வழிவகை செய்கிறது.

சவுக்கு விதைகளை நேரடியாக விதைக்கலாம?

சவுக்கு மரத்தின் விதைகள் மிகச்சிறியதாக இருப்பதால் அதிகமாக மழை ,வறட்சி பூச்சிகள் தாக்குதல் போன்ற காரணங்களினால் பாதிக்கப்படுகிறது இதனால் நேரடி விதைப்பு முறைசவுக்கு விதைப்பிற்கு ஏற்றதல்ல.

மாட்டின் பாலில் கொழுப்புச்சத்து எவ்வாறு அதிகரிப்பது?

கோ-3 கோ 4 கம்பு நேப்பியர், புல்லை 40 முதல் 45 நாட்களுக்குள் அறுவடை செய்து தீவனமாக அளிக்க வேண்டும்.

பருத்திக்கொட்டை புண்ணாக்கு ,புளியங்கொட்டை தூள் மரவள்ளிக்கிழங்கு திப்பி ஆகியவற்றை தீவனமாக அளிக்கலாம்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories