கன்று நடுவதற்கு முன் குழியில் அரை அடி உயரத்திற்கு மண்புழு உரம் 5 கிலோ, தொழு உரம் 10 கிலோ, ஒரு கிலோ வேப்பம் புண்ணாக்கும் கலந்து நிரப்ப வேண்டும்.
தக்கைப்பூண்டு அல்லது சணப்பை போன்ற பயிர்களை ஊடுபயிராக நடவு செய்யலாம். இவற்றை பூ பிடிக்கும் பருவத்தில் வயலில் மடக்கி உழ வேண்டும்.
இதனால் களைகள் கட்டுப்படுவதுடன் தழைச்சத்து மற்றும் நுண்ணுயிரிகளின் அளவு மண்ணில் அதிகரிக்கும்.
மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசல் தொடர்ந்து அளிப்பதன் மூலம் அதிக மகசூல் பெறலாம்.
மண்புழு உரத்தை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை 10 கிலோ வீதம் ஒரு மரத்திற்கு வேரில் இடவேண்டும்.