நிலையான விவசாயத்திற்கு கை கொடுக்கும் இயற்கை உரம் பாலிசல்பேட்!

பாலிசல்பேட் என்பது ICL நிறுவனத்தால் இங்கிலாந்தில் கடலுக்கு அடியில் தோண்டி எடுக்கப்படும் பல் ஊட்டச்சத்து இயற்கை உரமாகும். இது பொட்டாஷ், சல்பர், கால்சியம் மற்றும் மெக்னீசியம் ஆகிய நான்கு முக்கிய ஊட்டச்சத்துக்களைக் கொண்ட ஒரு இயற்கை கனிமமாகும் (டைஹைட்ரேட் பாலிஹலைட்).

இது இயற்கையாகவே படிகமாக இருப்பதால் அது தண்ணீரில் மெதுவாக கரைந்து அதன் ஊட்டச்சத்துக்களை மெதுவாக மண்ணிற்கு வழங்குகிறது. பாலிசல்பேட்டின் இந்த அம்சம் பயிர் வளர்ச்சியின் போது ஊட்டச்சத்துக்களை பயிர்களுக்கு நீண்டகாலம் கிடைக்க செய்கிறது. அதே நேரத்தில் மற்ற பாரம்பரிய பொட்டாஷ் மற்றும் சல்பேட் உரங்களிலிருந்து ஊட்டச்சத்துக்கள் பயிர்களுக்கு குறுகிய காலத்திற்கு மட்டுமே கிடைக்கின்றன என்றார்.

பாலிசல்பேட் (டைஹைட்ரேட் பாலிஹலைட்) உர மூலக்கூறுகளின் நீண்ட வெளியீட்டுத் தன்மையால் இதில் உள்ள ஊட்டச்சத்துக்களின் இழப்பு அதிகப்படியான மழைப்பொழிவு இருக்கும்போது கூட மிகவும் குறைவாக உள்ளது. பாலிசல்பேட்டின் இந்த அம்சத்தால் அனைத்து விவசாய நிலங்களுக்கும், சூழ்நிலைகளுக்கும் மிகவும் பொருத்தமான உரமாக அமைகிறது.

பாலிசல்பேட் அனைத்து பயிர்களுக்கும் ஏற்றது.
இது விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் குறைந்த செலவில் மிகவும் வசதியான மற்றும் பயனுள்ள உரமாகும். இந்த ஒரு உரம் பயிர்களுக்கு நான்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. அனைத்து வகையான மண் மற்றும் பயிர்களுக்கும் பயனுள்ள இயற்கை உரமாகும். பாலிசல்பேட்டிலிருந்து கிடைக்கப்பெறும் சல்பர் தாவரங்களில் இது

நைட்ரஜன் பயன்பாட்டை அதிகரிக்கிறது, நைட்ரஜன் பயன்பாட்டு திறனை மேம்படுத்துகிறது (NUE). தாவரங்களில் நிலையான புரத உற்பத்திக்கு சல்பர் மற்றும் நைட்ரஜன் ஊட்டச்சத்துக்களை சமநிலைப் படுத்துவது மிகவும் முக்கியம். பாலிசல்பேட்டில் குறைந்த அளவு குளோரைடு (Cl) இருப்பதால் இந்த குளோரைடு புகையிலை, திராட்சை, தேயிலை மற்றும் உருளைக்கிழங்கு போன்ற பயிர்களுக்கு மிகவும் பொருத்தமான உரமாகும்.

மண் ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் நன்மை பயக்கும் இயற்கை உரம்.
பாலிசல்பேட் நடுநிலையான pH கொண்ட உரம். எனவே அனைத்து வகையான மண்ணின் ஆரோக்கியத்திற்கு ஏற்றது. மற்ற உரங்களைப் போலல்லாமல், ICL பாலிசல்பேட் இயற்கையாக மட்டுமே கிடைக்கிறது. இங்கிலாந்து கடற்கரையின் வட கடலுக்கு அடியில் உள்ள ICL கிளீவ்லேன்ட் சுரங்கத்தில் 1200 மீட்டர்

ஆழத்தில் இருந்து பாலிசல்பேட் வெட்டிஎடுக்கப்பட்டு, அரைக்கப்பட்டு, தூய்மைப்படுத்தப்பட்டு, வெளியேற்றப்பட்டு உலகம் முழுவதும் அனுப்பப்படுகிறது. பாலிசல்பேட் உற்பத்தியில் எந்த வேதியல் செயல்முறையும் இல்லை. எனவே இந்த இயற்கை உரம் கரிம வேளாண்மைக்கு ஏற்றது. பாலிசல்பேட் உற்பத்தியில் கார்பன் உமிழ்வு (ஒரு கிலோ தயாரிப்புக்கு 0.034 கிலோ) மற்ற

உரங்களை விட மிகக் குறைவு. இது மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் பாதுகாப்பிற்கு மிகவும் ஏற்றது.

பாலிசல்பேட், இது பல் ஊட்டச்சத்துக்களான கந்தகம், பொட்டாஷ், மெக்னீசியம் மற்றும் கால்சியம் ஆகியவற்றை உலகளவில் வழங்குவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுவான இயற்கை உரமாகும்.

இந்தியாவில், இது பாலிஹைலைட் என்ற பெயரில் இந்தியன் பொட்டாஸ் லிமிடெட் நிறுவனத்தில் கிடைக்கிறது என்றார்.

மேலும்தகவலுக்குநீங்கள்எங்களின் www.fertilizers.sales@icl-group.com என்றஇணையதளத்தைபார்வையிடலாம். பாலிசல்பேட்பற்றியவிரிவானதகவல்கள் www.polysulphate.com -என்றஇணையதளத்திலும்கிடைக்கிறது என்று கூறினார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories