பார்த்தீனியக் களைகள்- பக்குவமாக உரமாக்க சில டிக்ஸ் விவரங்கள்!

பார்த்தீனியச் செடிகளைப் பக்குவமாக மாற்றி உரமாகப் பயன்படுத்துவதன் மூலம் அதன் தீமையில் இருந்து அனைத்து உயிரினங்களையும் பாதுகாக்க முடியும்.

பார்த்தீனியம்
பாரபட்சமின்றி மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் தீங்கு விளைவிக்கும் செடி என்றால் அது பார்த்தீனியம்தான். இந்த செடியினால் ஆஸ்த்துமா, தொழுநோய் மற்றும் சுவாசம் சம்பந்தமான நோய்கள் மனிதனுக்கு உண்டாகிறது. கால்நடைகள் செடிகளின் வழியாக நடக்கும்போது அல்லது அதை நுகரும்போது காய்ச்சல் மற்றும் அரிப்பு ஏற்படுகின்றது.

கட்டுப்படுத்த வழிகள் (Ways to control)
இவ்வகை பார்த்தீனியக் களைகளை கட்டுப்படுத்த அட்ரசின் களைக்கொல்லி 4 கிராமுக்கு ஒரு லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் எக்டருக்கு 500 லிட்டர் நீரில் கலந்து களைகள் முளைக்குமுன் தெளிக்க வேண்டும் இதில்

சமையல் உப்பு 200 கிராம் + 2 மி. லி சோப்பு திரவத்தினை ஒரு லிட்டர் நீரில் கலந்து களைகளின் மீது நன்கு நனையும்படி கைத்தெளிப்பான் கொண்டுத் தெளிக்கவும்.

கிளைபோசேட் 10 மி.லி +20 கிராம் அமோனியம் சல்பேட் + 2 மி.லி சோப்பு திரவம் 1 லிட்டரில் கலந்து பூப்பதற்கு முன் தெளிக்க வேண்டியது அவசியம் மற்றும்

பொதுவாக பார்த்தீனியச் செடிகளைக் கையுறை கொண்டு அல்லது கருவி உபயோகித்து பூப்பதற்கு முன் களைகளை வேருடன் அகற்றிவிட வேண்டும்.

பின்னர் அதை மட்கச்செய்து இயற்கை உரமாகவும் பயன்படுத்தலாம்.

இயற்கை உரம் தயாரித்தல்
பார்த்தீனிய செடிகளை 5 முதல் 10 செ.மீ அளவு சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி அடுக்கக் கொள்ளலாம்.

இவற்றின் மேல் 10 சதவீத மாட்டு சாணக் கரைசலைக் கொண்டு சமமாகத் தெளிக்க வேண்டும்.

இவற்றை 10 நாட்கள் மட்க விட்டு அதன்பிறகு 250 முதல் 300 மண்புழுக்களை விட்டு ஈரப்பதம் 60 சதவீதம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

பார்த்தீனிய மக்கு உரம் 40 முதல் 60 நாட்களில் தயாராகி விடும் எனவே

சத்துக்கள்
இந்த உரத்தில் தழை, மணி, சாம்பல் சத்துக்கள் முறையே 1.15, 0.44, 0.97 சதவீதமாக உள்ளது. இது தொழு உரத்தைக் காட்டினும் அதிகமாக உள்ளது.
வேஸ்ட் டீகம்போஸர் கரைசலைக் கொண்டு பார்த்தீனியச் செடியினை மக்க வைக்கலாம்.முதலில் 5 லிட்டர் தண்ணீரில் இரண்டு கிலோ வெல்லத்தை நன்குக் கரைத்து பின்பு அதனுடன் 195 லிட்டர் சுத்தமான நீரைச் சேர்க்க வேண்டும்.

இதனுடன் வேஸ்ட் டீகம்போஸர் தாய்வித்தைக் கலந்து வலது மற்றும் இடது புறமாக சுத்தமானக் குச்சி கொண்டு காலையும், மாலையும் இரண்டு முறைக் கலக்க வெண்டும்.சுத்தமானத் துணி கொண்டு வாய்ப் பகுதியினை மூடிவிட வேண்டும்.பத்து நாட்களில் வேஸ்ட் டீகம்போஸர் திரவம் தயாராகி விடும் என்று கூறினார்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories