மரக்கன்றுகளுக்கு என்ன உரம் இட்டால் நன்றாக வளரும்?

ஜீவாமிர்தக் கரைசல் மீன் அமினோ அமிலம் ஆகியவற்றை மக்கிய தொழு உரத்துடன் கலந்து வேரில் எடுப்பதால் மரம் நன்கு வளரும்.

பலா மரத்திற்கு அரப்பு மோர் கரைசலை தெளிக்கலாமா?

அரப்பு மோர் கரைசலை பூ பிடிக்கும் பருவத்தில் தெளிப்பதால் பயிர் வளர்ச்சி வேகமாக காணப்படும் நிறைய பூக்கள் பூக்கும் ஆண்டிற்கு ஒரு முறை கவாத்து செய்ய வேண்டும்.

தேங்காய்ப்பால் கடலைப் புண்ணாக்கு பயன்கள் யாவை?

பூக்கள் உதிர்வதை தடுக்கிறது அதிகப்படியான பிஞ்சுகள் வருவதற்கு உதவுகிறது.

நன்மை செய்யும் பூச்சிகளின் நடமாட்டம் அதிகரிக்கும் இதன் வாசலில் தேனீக்கள் மற்றும் நன்மை செய்யும் பூச்சிகளை அவரது மகரந்தசேர்க்கை அதிக அளவில் நடைபெறும்.

கரும்பில் சிவப்பு நிறமாக மாறி இருக்கிறது அதை தடுக்க என்ன செய்ய வேண்டும்?

ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் சூடோமோனஸ் மற்றும் 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி கலந்து தெளிக்கலாம்.

ஒரு வாரம் ஒருமுறை தசகாவ்யா கரைசலைத் தெளிக்கலாம்.

நெல் விதைகளை விதை நேர்த்தி செய்வதற்கான எளிய முறைகளைக் கூறுகிறது?

நெல் விதைகளை புதினா இலைச் சாற்றினை 24 மணி நேரம் ஊறவைத்து விதைத்தால் சிவப்பு இலைப்புள்ளி நோய் கட்டுப்படுத்தப்படும்

நெல் விதைகளை பாலில் ஊறவைத்து விதைத்தால் நெல் துய்ங்ரோ மற்றும் குட்டை நோய் தாக்குதலுக்கு எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

கன்று குட்டிகள் கழிச்சல் அதிகமாக உள்ளது அதை தடுக்க என்ன செய்யலாம்?

வசம்பு இலை இரண்டு அல்லது சிறிதளவு கொய்யா கொழுந்து 200 கிராம் சுக்கு 50 கிராம் சேர்த்து அரைத்துக் கொடுத்தால் கழிச்சல் நின்றுவிடும்.

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories