அசுவினி பூச்சி குருத்து ஈ தாக்குதலை எப்படி கட்டுப்படுத்தலாம்?
அஸ்வினி பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த இஞ்சி, பூண்டு ,பச்சைமிளகாய் கரைசல் தெளிக்கலாம்.
குருத்து ஈ தாக்குதல் இருந்தால் அதை கட்டுப்படுத்த வேப்பம் புண்ணாக்கு கரைசலை பயன்படுத்தலாம்.
மணத்தக்காளி கீரை எப்படி பயிர் செய்வது?
மணத்தக்காளிக்கீரை ஆனது விதைகள் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.
ஏக்கருக்கு ஒரு கிலோ விதைகளை தொழு உரமிட்டு பாத்திகளில் வைத்து ஆறு சென்டிமீட்டர் உயரம் வளர்ந்த செடிகளை நடவு வயலில் தண்ணீர் பாய்ச்சி செடிக்குச் செடி 45 சென்டிமீட்டர் இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்
அவரையில் பூஞ்சாண நோயை எப்படி தடுப்பது?
அவரையில் அதிக மழைக்காலங்களில் இந்த வகை பாதிப்புகள் ஏற்படும். விதைகளை விதை நேர்த்தி செய்து வைப்பதால் பூஞ்சாண நோய் வருவதை தடுக்கலாம்.
இந்த பூஞ்சாண நோயைக் கட்டுப்படுத்த 3 கிலோவும் பண்ணை தொழு உரத்துடன் எதிரியான டிரைக்கோடெர்மா 250 கிராம் கலந்து ஏழு நாட்கள் வைத்திருந்து பிறகு அதை செடிக்கு இடலாம்.
மிளகாய், கத்தரி பயிர்களுக்கு மண் புழு உரத்தை எப்படி இடலாம்?
மிளகாய், கத்தரி பயிர்களுக்கு அடியுரமாக ஏக்கருக்கு 250 கிலோ மண்புழு உரத்தினை 3 முறை பிரித்து இடலாம்.
மாட்டுக்கு ஒரு கொம்பில் மட்டும் வீக்கம் ஏற்பட்டு பால் வரவில்லை அதற்கு என்ன செய்யலாம்?
வேலிப்பருத்தி இலை ஒரு கைப்பிடி அளவு எடுத்து கசக்கி அதில் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து மூன்று சொட்டு எருக்கம் பாலை விட்டு நன்றாக கலந்து காம்புகளில் தடவ வேண்டும். காம்பு வீக்கம் குறையும் வரை இதைப் பயன்படுத்த வேண்டும்.
மேலும் சிகிச்சை அளிக்க அருகில் உள்ள கால்நடை மருத்துவரை அணுகலாம்.