முறையான தண்ணீர் பாய்ச்சவேண்டும். மீன் அமினோ கரைசல் 200 மில்லி எடுத்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்து பயிர்களின் மேல் தெளிக்கலாம் மற்றும் ஜீவாமிர்தக் கரைசல் முறையில் மாறி மாறி வாரம் ஒரு முறை தெளித்து வந்தால் பூக்கள் உதிர்வதைத் தடுக்கலாம் .அரப்பு மோர் கரைசலை பூ பிடிக்கும் பருவத்தில் தெளிப்பதால் மரத்தின் வளர்ச்சி வேகமாகவும் நிறைய பூக்கள் பூக்கும்.
ஒருவருட கிடாரி கன்று நோஞ்சான் போன்ற உள்ளது. நன்றாக தீனி எடுத்தாலும் உடலில் சக்தி இல்லாமல் நடக்கும் போது கூட தடுமாறுகிறது .இதற்கு என்ன செய்யலாம்.
கன்றுகளுக்கு அருகில் உள்ள கால்நடை மருத்துவரின் உதவியுடன் முறையான குடற்புழு நீக்க மருந்து அளிக்க வேண்டும். இதனால் கன்று வளர்ச்சி நன்றாக இருக்கும்.
நெல் பயிர் தூர் கட்ட என்ன மருந்து கொடுக்கலாம். எத்தனை நாட்களுக்கு முன்பாக கொடுக்க வேண்டும். இயற்கை விவசாயத்தில் முறையில் மண்புழு உரம் மற்றும் அசோஸ்பைரில்லம் கொடுத்துள்ளேன்.
இயற்கை விவசாயத்தில் பச்சை வண்ண அட்டையைப் பயன்படுத்தி சோதித்து வயலுக்கு தேவையான அளவில் மட்டுமே உரங்களைக் கொடுக்க வேண்டும். சோதனையின்போது 3ஆம் எண்ணுக்கு மேல் பச்சையம் இருந்ததால் எந்தவிதமான உரங்களையும் நெல் வயலுக்கு கொடுக்கத் தேவை இல்லை.