மிளகாய்ச் செடியில் நுனி கருகல் நோய் எப்படி உண்டாகிறது?
மிளகாய் செடி பொதுவாக ஒரு மாதத்திற்கு பிறகு நுனிக் நோய் கருகல் தாக்குதலுக்கு ஆளாகிறது.
நோய் தீவிரமாகும் போது மேலிருந்து கீழ் நோக்கி பரவும். பூக்கள் அதிகளவில் உதிர்ந்து விடும். மேலும் கிளைகளில் கரும்புள்ளிகள் தோன்றும். நுனி தளிர் இலைகள் கருகி காய்ந்து காணப்படும். 15 நாட்களுக்கு ஒருமுறை பஞ்சகாவிய கரைசலைத் தெளித்து விட வேண்டும்.
தென்னங்கன்று உற்பத்தி விதைகள் தேர்வு செய்யும் வழிமுறைகள் என்ன?
தென்னங்கன்று உற்பத்திக்கு நான்கு முதல் ஐந்து ஆண்டுகளில் நன்றாக காய்க்க தொடங்கிய மரங்களிலிருந்து விதைகளைத் தேர்வு செய்ய வேண்டும்.
விதைகள் வளர்ச்சி மற்றும் வீரியம் உடையதாக இருக்கவேண்டும் .தாய் மரங்களில் இருந்து எடுத்த விதை தேங்காய் மூலம் உருவாகும் கன்றுகளில் ஒரே சீராக வளர்ச்சியுடன் ஒருங்கிணைந்த குணங்களுடைய கன்றுகளை மட்டும் நடவிற்கு தேர்வு செய்ய வேண்டும்.
முருங்கை மரம் எவ்வாறு பட்டுப் போகிறது?
நாவாய்ப்பூச்சி இனத்தைச் சேர்ந்தது தேயிலைக் கொசு என்று சாறு உறிஞ்சும் பூச்சி மூலம் முருங்கை மரத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. இதன் தொடர் தாக்கத்தினால் மரம் பட்டுப் போகிறது.
இந்த பூச்சியை உருவத்தில் கொசுவைப் போன்றும், முதன் முதலாக தேயிலை செடியிலும் கண்டறியப்பட்டதால் தேயிலைக் கொசு என்ற பெயர் ஏற்பட்டுள்ளது.
இந்த பூச்சியானது குறிப்பாக முருங்கையிலும் தேயிலை, கொட்டை முந்திரி, கொக்கோ ,கொய்யா மற்றும் வேப்ப மரங்களிலும் தாக்கத்தை உண்டாக்குகிறது.
சூரியசக்தி மின் வேலி அமைக்க மானியம் வழங்கப்படுகின்றத?
வயல்வெளிகளில் விலங்குகள் நுழையாமல் இருக்க சூரிய சக்தி யால் இயங்கக்கூடிய மின்வேலி அமைப்பதற்காக விவசாயிகளுக்கு 50% மானியம் வழங்கப்படுகிறது.
இந்த மானியம் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.
கால்நடைகளின் கொம்புகளில் உள்ள காயங்களுக்கு எப்படி சிகிச்சை அளிக்க வேண்டும்?
புகை படுகை ( சமையலறையில் படிந்துள்ள புகை படிவு 50 கிராம், சீனி 50 கிராம் ,சுண்ணாம்பு 50 கிராம் ஆகியவற்றை நன்கு கலந்து கொம்பில் தடவி துணியை இருக்க சுற்றி கட்டவும்.
பிறகு துணியில் வேப்ப எண்ணெய் பூச வேண்டும் .இதனால் ஈ மொய்க்காது . காயம் ஆறியதும் தானாகவே துணி விழுந்துவிடும்.