வெள்ளாட்டுப் பால் மற்றும் எருவில் கூட நல்ல லாபம் கிட்டும். எப்படி?…

வெள்ளாட்டு பால்:

** வளர்ந்து வரும் மக்கள் தொகையைக் கணக்கிட்டு, நமது வருங்காலப் பால் தேவையை நோக்கினால் பால் உற்பத்திக்குப் பெரும் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும். நமது பெரிய தேவையை வெள்ளாட்டுப் பால் உற்பத்தி மூலம் எட்டிவிட முடியாது.

** அத்துடன் யாவரும் வெள்ளாட்டுப் பால் உற்பத்தி மூலம் எட்டிவிட முடியாது. அத்துடன் யாவரும் வெள்ளாட்டுப் பாலை விரும்பி ஏற்பதும் இல்லை. ஆனால் வெள்ளாடு ஏழையின் பசு எனக் கருதப்படுகின்றது.

** ஏனெனில், பெரிய பசுவைப் பேண முடியாத ஏழைகள் வெள்ளாடுகளை வளர்க்க முடியும். வீட்டுத் தே¨க்குச் சிறிது வெள்ளாட்டுப் பாலை பயன்படுத்திக் கொள்ள முடியும். மேல் நாடுகளில் சிறப்பாக பாலுக்காகவே வெள்ளாடுகள் வளர்க்கப்படுகின்றன. வெள்ளாடுகள் குழந்தைகளின் செவிலித் தாய் எனப்படுகின்றன.

** ஆட்டுப்பாலில் ஒரு வகை வாடை இருக்கும். இதற்கு முக்கிய காரணம் வெள்ளாட்டுக் கடாக்களை ஆடுகளுடன் சேர்த்து வளர்ப்பதே காரணமாகும்.

** கடா வெளியேற்றும் வாடையை ஆட்டுப்பால் உறிஞ்சிக் கொள்வதால், இவ்வகையான வாடை இருக்கின்றது. கடாக்களைத் தனியாகப் பிரித்து வளர்க்கும் போது இப்பிரச்சனைகளைக் குறைக்கலாம்.

எரு

** வெள்ளாட்டுச் சாணம் சிறந்த எருவாகும். மாட்டுச் சாணத்தில் 20%க்கு மேல் எரி பொருளாக எரித்து விடப்படுகின்றது. ஆனால், ஆட்டுச் சாணம் முழுவதும் நிலத்திற்கு எருவாக மாத்திரமே பயன்படுகிறது.

** மேலும், மாட்டு சாணத்தை மக்கச் செய்துதான் வயலில் உரமாகப் போட முடியும். ஆனால் ஆட்டுச் சாணம் உடனடியாக எருவாகப் பயன்படுத்த முடியும். இதன் காரணமாகத் தான் மாட்டுச் சாணம் மறு ஆண்டு. ஆட்டுச் சாணம் அவ்வாண்டு, எனக் குறிப்பிடப்படுகின்றது.

** ஆள்கூழ் முறையில் ஆடுகளை வளர்த்தால், இன்னும் அதிக அளவில் எரு கிடைக்கும்.

 

 

 

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories