வேப்பங்கொட்டை சாறு ஒரு ஏக்கருக்கு எத்தனை அளவு பயன்படுத்த வேண்டும்?

ஒரு தருணத்தில் பத்து லிட்டர் தண்ணீருக்கு வேப்பங்கொட்டை பருப்பு சாறு 200 மில்லி கலந்து தெளிக்க வேண்டும்.

தக்காளியில் இலை சுருட்டு காணப்படுகிறது என்ன செய்வது

தக்காளியில் இலை சுருட்டு நோயானது சாறு உறிஞ்சும் பூச்சிகள் மூலம் உண்டாகிறது. இந்த நோயைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீரில் 5 மில்லி வேப்ப எண்ணெய் கரைசல் உடன் கலந்து தெளிக்கலாம். மேலும் மூன்று நாட்களுக்கு பிறகு புளித்த மோர் அல்லது தேமோர் கரைசல் தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

மல்லிகையில் ஊடுபயிராக என்ன பயிர் நடவு செய்யலாம்.

மல்லிகை ஊடுபயிராக தக்காளி போன்றவற்றை பயிர் செய்யலாம்.

மல்லிகைச் செடியில் பூக்கள் சரியாக பூக்கவில்லை என்ன செய்வது.

10 நாட்களுக்கு ஒரு முறை 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா கலந்து தெளிக்க வேண்டும்.

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories