உரத் தட்டுப்பாடு: உரத்தை பங்கிட்டு பயன்படுத்தும் விவசாயிகள் பற்றிய தகவல்கள்!

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை (NorthEast Monsoon) சீசன் தொடங்கியதில் இருந்து பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாய பணிகளில், விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாய பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வந்தாலும் நெற்பயிர் களுக்கு தேவையான உரம் மற்றும் யூரியா கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதுடன் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மிகுந்த ஏமாற்றமும் வேதனையும் அடைந்துள்ளனர் எனவே

ஒரு மூட்டை
இதனிடையே ஆர்.எஸ். மங்கலம், சோழந்தூரை சுற்றி உள்ள பல கிராமங்களில் ஒரு மூடை உரம் மற்றும் யூரியாவை வாங்கி 3 அல்லது 4 விவசாயிகள் அதை தங்களுக்குள் பங்கு பிரித்து நெற் பயிர்களுக்கு (Paddy Crops) தூவி வரும் நிலை ஏற்பட்டு உள்ளது. நேற்று ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஒரு மூட்டை யூரியாவை 2 விவசாயிகள் சேர்ந்து பங்கு பிரித்து பயிர்களுக்கு தூவி வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயி முத்துகூறியதாவது: இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கியதில் இருந்தே நல்ல மழை பெய்து வருகிறது. நெற்பயிர்கள் மழையால் நன்கு வளர்ந்து வருகிறது. மழை சரியாக பெய்து வரும் நிலையில் நெற்பயிர்கள் செழிப்பாக வளர தேவையான உரம் (Compost) மற்றும் யூரியா கிடைப்பதில் கடும் தட்டுப்பாடாக உள்ளது. யூரியா மற்றும் உரம் சரிவர கிடைப்பதில்லை இதில்

தட்டுப்பாடு
ஒரு ஏக்கர் நெற்பயிருக்கு ஒரு மூட்டை யூரியா தூவ வேண்டும். ஆனால் யூரியா தட்டுப்பாடாக இருப்பதால் 2 ஏக்கர் நெற்பயிருக்கு ஒரு மூடை தூவி வருகிறோம். யூரியா தட்டுப்பாட்டால் இந்த ஆண்டு நெற்பயிர்கள் செழிப்பாக வளருமா என்ற ஒரு கேள்விக்குறி எழுந்துள்ளது என தெரிவித்தார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories