ஒரு அடி ஆழத்தில் சதுரக் குழி தோண்டி சுற்றி மக்கிய தொழு உரம் இடவேண்டும். பிறகு உரத்தை மண்ணுடன் சேர்த்து கிளறி விட வேண்டும்.
ஒவ்வொரு அறுவடைக்குப் பிறகு ஒரு செடிக்கு 20 கிலோ தொழு உரம் இடவேண்டும்.
வருடம் ஒரு மரத்திற்கு 15 முதல் 20 கிலோ வரை தொழு உரம் அல்லது மண்புழு உரம் இடவேண்டும். மேலும் 150 கிராம் தழைச்சத்து 25 கிலோ மணிச்சத்து 50 கிராம் சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய உரங்களை இட்டு மண் அணைக்க வேண்டும். அதன் பிறகு தேவைக்கேற்ப வருடத்திற்கு வருடம் உர அளவினை அதிகப்படுத்த வேண்டும் .நூறாம் நாள் ஒவ்வொரு செடியின் வேர்ப்பகுதியில் 50 கிராம் வேப்பம் பிண்ணாக்கை வைக்கவேண்டும்.