பச்சை மிளகாய்\ உரங்கள்

செடிகளை காக்கும் இயற்கை பூச்சி கொல்லியான வேப்ப எண்ணெய் மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும்.

வேப்ப இலைகளை சேகரித்து நன்கு காய வைத்து தூள் செய்து கொள்ள வேண்டும் .இந்த தூளை செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் செடியின் வேர்ப் பகுதியில் போட்டு நன்கு கொத்திவிட வேண்டும் .இதுவே அடி உரமாகவும் பூச்சி கொல்லியாகவும் செயல்படும்.

பஞ்சகாவியா உரத்தை மேல் தெளிப்பானாக தெளிக்கலாம்.மேலும் சமையலறை கழிவுகளை உரமாக இடலாம்.காய் கழுவிய தண்ணீர் அரிசி கழுவிய தண்ணீர் ஆகியவற்றை செடிகளுக்கு உரமாக ஊற்றலாம்.
செடிகளைச் சுற்றி மண்ணை வாரம் ஒருமுறை கொத்திவிட வேண்டும் .மண்ணை கொத்தி விடாமல் தொடர்ந்து தண்ணீர் ஊற்றுவது பயனளிக்காது.

அறுவடை

காய்கள் திரண்ட உடன் பச்சை மிளகாயை அறுவடை செய்யலாம் .வற்றல் மிளகாய்க்கு பழங்களை பழுக்க விட்டு அறுவடை செய்ய வேண்டும்.

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories