பெருங்காயம் சமையலுக்கு மட்டும் அல்ல இயற்கைக்கும் பயன்படுகிறது

ஈரோடு அருகே உள்ள கொடுமுடி கிராமத்தில் உள்ள விவசாயி செல்லமுத்து பெருங்காயத்தை பயன் படுத்தி நல்ல மகசூல் பெற்றுள்ளார் என்றார் .

அவர், பெருங்காயம் பூச்சிகளை கட்டு படுத்துவதாகவும் கூறுகிறார்.

ஒரு ஏகர் நிலத்திற்கு, அவர் ஒரு கிலோ பெருங்காயத்தை ஒரு சாக்கு பையில் போட்டு நீர் பாசனம் இருக்கும் கால்வாயில் விட்டு வைத்தார். நீரில் பெருங்காயம் கரைந்து செடிகளுக்கு செல்கிறது என்றார் .

இந்த முறையால், பயிர்கள் நன்றாக வளர்வது மட்டும் இல்லாமல், பூச்சிகளின் தாக்குதலும் குறைகிறது என்கிறார் இவர்.

இந்த முறையை அவர் ஊரில் உள்ள மற்ற விவசாயிகள் , மல்லிகை, அரிசி, நிலகடலை, தக்காளி, கத்திரி போன்ற பயிர்களில் பயன் படுத்தி பயன் பெற்றுள்ளனர் என்கிறார் இவர்.
இவரை தொடர்பு கொள்ளும் முகவரி: திரு செல்லமுத்து, கருக்கம்பாலயம், ஊஞ்சலூர் போஸ்ட், கொடுமுடி, ஈரோடு தாலுகா, தமிழ்நாடு. போன்: 04204266127, அலைபேசி எண்:9486602389.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories