ஏக்கருக்கு 150 கிலோ யூரியா, 156 கிலோ சூப்பர் பாஸ்பேட், 34கிலோ பொட்டாஷ் தேவைப்படும். இதில் அடியுரமாக 30 கிலோ யூரியா ,156 கிலோ சூப்பர் பாஸ்பேட் ,17 கிலோ பொட்டாஷ் இட வேண்டும். விதைத்த 25 ஆம் நாள் மேலுரமாக 60கிலோ யூரியா மற்றும் நாற்பத்து ஐந்தாம் நாள் 29 கிலோ யூரியா, 17 கிலோ பொட்டாஷ் இட வேண்டும்.
இயற்கை உரமிடல் முறையில் 15ஆம் நாளில் வடிகட்டிய பஞ்சகவ்யா 200 லிட்டரை பாசன நீர் வழியாகக் கொடுக்கவேண்டும். 40 நாளில் பூக்களோடு இருக்கும் தருணத்தில் மீண்டும் ஒரு முறை 200 லிட்டர் பஞ்சகாவ்யாவை பாசன நீருடன் கொடுத்தால் பக்கவாட்டில் தோன்றும் கதிர்கள் விரைவான வளர்ச்சி அடையும்.