மண்புழு உரத்தைப் பயன்படுத்தி மண்ணின் வளத்தைப் பெருக்கலாம்……

நாட்டு முறையில் தொழு உரங்களின் பற்றாக் குறையினால் வேளாண்மையில் குறைந்த அளவே இயற்கை உரங்கள் சேர்க்கப்படுவதால் மண் இறுகி பயிர்வளர்ச்சி குன்றிவிடுகிறது.
மண்புழு உரத்தில் மற்ற எல்லா உரங்களை விட அதிக முதன்மை சத்துக்களும் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களான துத்தநாகம், இரும்பு, மாங்கனீசு மற்றும் கந்தக சத்துக்கள் உள்ளன. இதன்மூலம் மண்ணின் கட்டமைப்பு சீரடைந்து,காற்றோட்டம் அதிகரித்து நீர் உட்புகும் திறன் 30 சதவீதம் அதிகரிக்கிறது.

இயற்கை விவசாயத்தில் மண்புழு உரம் பெரும்பங்காற்றுகிறது. இலை, தழை, கழிவுப் பொருட்களை உண்டு, மண்புழுக்கள் தரும் உரத்தின் பெயர் தான் மண்புழு உரம் எனப்படுகிறது.

மண்புழுக்கள் ஈரப்பதம் மிகுந்த மண்ணிலும், தோட்டத்திலும், இலைகள் உதிர்ந்து கிடக்கும் பகுதிகளிலும் அதிகளவில் காணப்படுகிறது. இவை சுவாசத்திற்கு இவற்றின் தோல் ஈரத்தில் மிகுந்ததாக இருக்க வேண்டி இருப்பதால், ஈரப்பாங்கான இடங்களில் அதிகளவில் காணப்படும்.

இவை உதிர்ந்த இலைகள், அங்ககப் பொருட்கள் நிறைந்த மண்ணை உண்ணுவதன் மூலம் உணவைப் பெறுகின்றன. விழுங்கப்பட்ட மண் அரவைப் பையின் மூலமாக நன்றாக மாவாக்கப்படுகின்றன.

இவை மண்ணைத் தோண்டிக்கொண்டும், அதை உணவாக உட்கொண்டும் வாழ்கின்றன. விழுங்கப்பட்ட மண் கழிவு பொருட்களுடன் சேர்ந்து வெளியேறுவதால் மண் வளமாகிறது.

காற்று புகுவதற்கும், மண்ணின் ஈரப்பதம் நீடித்திருப்பதற்கும் அதிகப்படியான நீர் எளிதில் விழாததற்கும், வேர்கள் நன்கு வளர்வதற்கும் பயன்படுகின்றன. இவை நைட்ரஜன் கலந்த கழிவுப் பொருட்களை வெளியேற்றுகிறது.

இதனால் மண் வளமாகிறது. ஓராண்டில் சராசரியாக 6 கிராம் அளவு வளமான புதிய மண்ணை ஒவ்வொரு மண்புழுவும் தருகிறது.

மண்புழு உருவாக்கும் கழிவுப் பொருட்களில் 0.72 சதவீதம் தழைச்சத்து, 0.25 சதவீதம் மணிச்சத்து, 2.74 சதவீதம் சாம்பல் சத்து உள்ளது.

பொதுவாக மண்புழு ஜூலை முதல் அக்டோபர் வரை நன்கு இனப்பெருக்கம் செய்யும். இயல்பாக உள்ளூரில் கிடைக்கும் மண்புழுவையே பயன்படுத்த வேண்டும்.

 

 

 

 

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories