எண்ணெய் வித்துக்களுக்கு இந்த ஆண்டு என்ன விலை கிடைக்கும்? தெரியுமா?

முக்கிய எண்ணெய் வித்துக்களான நிலக்கடலை, எள் போன்றவற்றிற்கு தமிழகத்தில் இந்த ஆண்டு என்ன விலை கிடைக்கும் என தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) கணித்துள்ளது.

இந்தியாவில் நிலக்கடலை பரப்பளவு மற்றும் உற்பத்தி 2018-19ம் ஆண்டு 4.94 மில்லியன் எக்டர் மற்றும் 6.72 பில்லியன் டன்களாக இருந்தது.

4.58லட்சம் டன் உற்பத்தி
தமிழகத்தில் 2018-19ம் ஆண்டு 3.35 லட்சம் பரப்பளவில் 4.85 லட்சம் டன்கள் நிலக்கடலை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், கடலூர், திருவாரூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், பயிரிடப்படுகிறது.

கடந்த ஆண்டு நல்ல விலை கிடைத்த நிலையில், இந்த ஆண்டு என்ன விலை கிடைக்கும் என்ற விவசாயிகளின் எதிர்பார்ப்புக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆய்வுகள் மேற்கொண்டது.

இதன் அடிப்படையில் அறுவடையின் போது தரமான நிலக்கடலையின் சராசரி பண்ணை விலை (ஏப்ரல் – மே 2021) கிலோவிற்கு ரூ.51-53 வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

எள் (Sesame)
உலகளவில் எள் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா முதன்மையாகத் திகழ்கிறது. வேளாண் மற்றும் உழவர் நல அமைச்சகத்தின் 2020-21ஆம் ஆண்டில் முதலாவது முன் கூட்டிய மதிப்பீடுகளின் படி எள் 7.55 இலட்சம் டன் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2017-18ம் ஆண்டில் தமிழகத்தில் 0.41 இலட்சம் ஹெக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 0.23 லட்சம் டன் என் உற்பத்தி செய்யப்பட்டது. விழுப்புரம், ஈரோடு, தஞ்சாவூர், கரும், சேலம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் என் பெருமளவில் பயிரிடப்படுகிறது.

இச்சூழலில், விவசாயிகள் விதைப்பு முடிவுகளை எடுக்க ஏதுவாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டம் மேற்கொண்ட ஆய்வுகளின் படி, நல்ல தரமான எள்ளின் விலை அறுவடையின் போது ஏப்ரல் – மே 2021 வரை ஒரு கிலோவிற்கு ரூ.90 முதல் ரூ95 இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு, உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம், தொலைபேசி – 0422-2431405 மற்றும் தொழில்நுட்ப விவரங்களுக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், எண்ணெய் வித்துக்கள் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் 641003 தொலைபேசிஎண்-0422-245082. தொடர்பு கொள்ளலாம் என்றார்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories