எள் சாகுபடி..!

 எள் சாகுபடி..!

இரகங்கள்:

கோடை எள் சாகுபடி பொறுத்தவரை அதிகமாக கோ 1, டி.எம்.வி 3, டி.எம்.வி 4, டி.எம்.வி 5, டி.எம்.வி 6, எஸ்.வி.பி.ஆர் 1, வி.ஆர்.ஐ (எஸ்.வி)1, டி.எம்.வி 7 ஆகிய இரகங்கள் சாகுபடிக்கு பயன்படுத்தப்படுகின்றது.

பருவம்:

எள் சாகுபடி பொறுத்தவரை மானாவாரியாக பயிரிட ஆடி, கார்த்திகை மாதங்கள் சிறந்தவை. அதன் பிறகு இறவைப் பயிராக பயிரிட மாசி மாதங்கள் ஏற்றவை.

 

நிலம்:

எள் சாகுபடி பொறுத்தவரை மணற்பாங்கான வண்டல், செம்மண் மற்றும் களிமண் போன்ற மண் வகைகள் ஏற்றவை. மண்ணின் சராசரி கார அமிலத்தன்மை 6 – 8 க்குள் இருக்க வேண்டும்.

எள் சாகுபடி முறைக்கு ஏற்ற நிலம் தயாரித்தல்:

இந்த எள் சாகுபடி  பொறுத்தவரை இரண்டு அல்லது மூன்று முறை நன்றாக உழவு செய்திருக்க வேண்டும்.

சிறிய விதைகளும் முளைக்குமாறு மண்ணில் உள்ள கட்டிகளை உடைத்து தன்மைப்படுத்த வேண்டும்.

பிறகு 12.5 டன் தொழுவுரம் அல்லது மக்கிய தென்னை நார்க்கழிவு போட வேண்டும்.

இறவை எள் சாகுபடி முறைக்கு, கிடைக்கும் நீர் மற்றும் நிலத்தின் அளவைப் பொறுத்து 10 சதுர மீட்டர் அல்லது 20 சதுர மீட்டர் அளவிற்கு படுக்கை தயாரிக்கவேண்டும். நீர் தேங்குவதைத் தடுக்க சமன்படுத்த வேண்டும்.

விதையளவு:

எள் சாகுபடி பொறுத்தவரை மானாவாரி பயிர்களுக்கு ஏக்கருக்கு 2 கிலோ விதைகள் தேவைப்படும். இறவை பயிர்களாக இருந்தால் ஒரு ஏக்கருக்கு 3 கிலோ விதைகள் தேவைப்படும்.

விதை நேர்த்தி:

எள் சாகுபடிப் பொறுத்தவரை அசோஸ்பைரில்லம் 100 கிராம், சூடோமோனஸ் 100 கிராம் ஆகியவற்றுடன் விதைகளை சேர்க்க வேண்டும். வடித்த கஞ்சியை ஆற வைத்து, அதில் விதைக்கலவையைச் சேர்க்க வேண்டும்.

ஒரு மணி நேரம் நிழலில் உலர்த்தி எடுத்து விதைத்தால் வேரழுகல் மாதிரியான நோய்கள் தாக்காது. நன்றாக முளைக்கவும் செய்யும்.

விதைத்தல்:

எள் சாகுபடிப் (sesame cultivation in tamil) பொறுத்தவரை 20 கிலோ மணல் அல்லது 20 கிலோ எருவுடன் எள் விதையைக் கலந்து விதைப்பது நல்லது.

அப்போதுதான் சரியான இடைவெளியில் விதைகள் விழுந்து முளைக்கும். வரிசைக்கு வரிசை 30 செ.மீ இடைவெளியும், செடிக்கு செடி 30 செ.மீ இடைவெளியும் கொடுக்க வேண்டும்.

நீர் மேலாண்மை:

எள் சாகுபடிப் பொறுத்தவரை அதிகமாக தண்ணீர் தேவைப்படாது, செடியை வளரவிட்டு தண்ணீர் கட்டினால், இலை குறைந்து காய் அதிகம் காய்க்கும்.

ஒவ்வொரு முறை தண்ணீர் பாய்ச்சும்போதும் 100 லிட்டர் ஜீவாமிர்தத்தை கலந்துவிட வேண்டும்.

எள்ளை விதை நேர்த்தி செய்து, ஜீவாமிர்தக் கரைசலையும் கொடுத்தால், எள்ளில் அதிகமாக தாக்குதல் நடத்தப்படும், மாவுப் பூச்சிகளின் தாக்குதல்கள் குறைந்துவிடும். அதன் பிறகு 45 முதல் 55 நாட்களில் பூ எடுக்க ஆரம்பிக்கும்.

அந்த நேரத்தில் 13 லிட்டர் தண்ணீரில் 300 மில்லி பஞ்சகாவ்யாவை கலந்து தெளித்தால் பூ உதிர்தல் கட்டுப்படுத்தப்படும்.

உரங்கள்:

எள் சாகுபடிப் (sesame cultivation in tamil) பொறுத்தவரை இறவை மற்றும் மானாவாரி பயிருக்கு முழு அளவு தழை, மணி, சாம்பல் சத்து உரங்களை அடி உரங்களாக இடவேண்டும். ஒரு ஏக்கருக்கு தழைச்சத்து (யூரியா 30 கிலோ), மணிச்சத்து (சூப்பர் பாஸ்பேட் 60 கிலோ) மற்றும் சாம்பல் சத்து ( பொட்டாசியம் 8 கிலோ) என்ற அளவில் உரமிட வேண்டும்.

ஏக்கருக்கு 4 கிலோ அசோஸ்பைரில்லம் மற்றும் 4 கிலோ பாஸ்போபாக்டீரியா உயிர் உரங்களை 20 கிலோ மணலுடன் கலந்து அடியுரமாக இடலாம். இவ்வாறு இடும்போது தழைச்சத்து கால்பங்கினை குறைத்துக் கொள்ள வேண்டும்.

ஏக்கருக்கு 2 கிலோ மாங்கனீசு சல்பேட்டை 20 கிலோ மணலுடன் கலந்து நிலத்தில் தூவுவதன் மூலம் மாங்கனீசு பற்றாக்குறையினை நிவர்த்தி செய்ய முடியும்.

களை நிர்வாகம்:

எள் சாகுபடிப் பொறுத்தவரை, நடவு செய்த 15 நாட்கள் முதல் 20 நாட்களுக்குள் முதல் களை எடுக்க வேண்டும். முதல் களை எடுத்ததில் இருந்து 15 நாட்கள் விட்டு அடுத்த களை எடுக்க வேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories