இறவையில் தழைச்சத்து 60 கிலோ, மணிச்சத்து 30 கிலோ ,சாம்பல் சத்து 30 கிலோ ஆகியவற்றை அடி உரமாக இடவேண்டும். மானாவாரியில் தழைச்சத்து 40 கிலோ மணிச்சத்து 50 கிலோ சாம்பல் சத்தும் 40 கிலோ ஆகியவற்றை அடியுரமாக இட வேண்டும்.
12.5 கிலோ நுண்ணூட்டக் கலவையை 10 கிலோ மணலுடன் கலந்து விதைகளை விதைப்பதற்கு முன்பு வயலில் இட்டு பிறகு விதைப்பு செய்ய வேண்டும்.
வளர்ச்சி ஊக்கிகள்
சூரியகாந்தி பூக்களில் விதைகள் அதிக அளவில் கிடைக்க விதைத்த 30 மற்றும் 60 நாளில் பிளநோஃபைக்ஸ் பயிர் ஊக்கி 280 கிராமம் 250 லிட்டர் தண்ணீர் சேர்த்து தெளிக்கவும்.
சூரியகாந்தி பூவின் அதிக பூக்கள் பிடிக்கமகரந்த சேர்க்கை மிகவும் முக்கியமானதாகும் .ஏக்கருக்கு இரண்டு தேனீப் பெட்டிகள் வைத்து தேனி வளர்ப்பதால் மகரந்த சேர்க்கையை அதிகரித்து மணிகள் அதிகரிக்கும்.