மழைக்காலத்தில் நிலக்கடலை பயிரை தாக்கும் பூச்சிகள்

மழைக்காலத்தில் நிலக்கடலை பயிரை தாக்கும் பூச்சிகள்

நிலக்கடலை
ரோமப்புழு: அமாஸ்க்டா அல்பிஸ்ட்ரைக்கா, அமாஸ்க்டா மூரி
சுருள்பூச்சி: அப்ரோஏரிமா மோடிசெலா
பீகார் ரோமப்புழு: ஸ்பைலோசோமா ஆப்ளிக்குவா
அமெரிக்கன் காய் புழு: கெலிகோவெர்பா ஆர்மிஜீரா
புகையிலை வெட்டுப்புழு: ஸ்போடாப்டிரா லிட்டுரா
நிலக்கடலை மொக்குத்துளைப்பான்: அனார்சியா எபிபையாஸ்
அசுவினி: ஏபிஸ் கிராசிவோரா
தத்துப்பூச்சி: எம்போஸ்கா கெரி
இலைப்பேன்: ஸ்கிரிப்டோத்ரிப்ஸ் டார்சாலிஸ்
பொன்வண்டு: ஸ்பினோடீரா இண்டிகா
கரையான்: ஓடோனோடெர்மஸ் ஒபிசஸ்
காய் துளைப்பான்: அனிசோலேபிஸ் ஸ்டாலி
காய் பூச்சி: எலோசமோலோமஸ் சாரிடிட்ஸ்
ரோமப்புழு: அமாஸ்க்டா அல்பிஸ்ட்ரைக்கா, அமாஸ்க்டா மூரி
சுருள்பூச்சி: அப்ரோஏரிமா மோடிசெலா
பீகார் ரோமப்புழு: ஸ்பைலோசோமா ஆப்ளிக்குவா
அமெரிக்கன் காய் புழு: கெலிகோவெர்பா ஆர்மிஜீரா
புகையிலை வெட்டுப்புழு: ஸ்போடாப்டிரா லிட்டுரா
நிலக்கடலை மொக்குத்துளைப்பான்: அனார்சியா எபிபையாஸ்
அசுவினி: ஏபிஸ் கிராசிவோரா
தத்துப்பூச்சி: எம்போஸ்கா கெரி
பிரன்கிலினியெல்லா ஸ்குல்ட்டுசி
பொன்வண்டு: ஸ்பினோடீரா இண்டிகா
கரையான்: ஓடோனோடெர்மஸ் ஒபிசஸ்
வெள்ளைப்புழு: கோலோட்ரைக்கியா செரோட்டா
காய் துளைப்பான்: அனிசோலேபிஸ் ஸ்டாலி
காய் பூச்சி: எலோசமோலோமஸ் சாரிடிட்ஸ்

நிலக்கடலை

தமிழகத்தில் சாகுபடி செய்யப்படும் எண்ணெய் வித்து பயிரில் நிலக்கடலை முக்கியமானது.

நிலக்கடலை பயிரிட முறையான பாத்தி அமைத்தல், உரமிடுதல், நுண் ஊட்டமிடுதல், ஊட்டச்சத்து கலவை தெளிப்பு, விதை நேர்த்தி, களை கட்டுபாடு, பாசனம் செய்தல் அவசியம். பூச்சி மேலாண்மையிலும் விவசாயிகள் அக்கறை காட்ட வேண்டும்.

 

மழைக்காலத்தில் நிலக்கடலை பயிரில் ரோமப்புழு, சுருள் பூச்சியின் தாக்குதல் அதிகமாக இருக்கும். இதைக் கட்டுபடுத்த, கோடை காலத்தில் நிலத்தை உழவு செய்து ரோமப்புழுக்களின் கூட்டுப்புழுக்களை அழிக்க வேண்டும்.

விளக்குப் பொறி, தீப்பந்தம் வைத்து கவர்ந்து அழிக்க வேண்டும். பயிர்களில் இடப்பட்டுள்ள முட்டைகளை சேகரித்து அழிக்க வேண்டும். வயலை சுற்றிலும் 30 முதல் 25 செ.மீ அகலத்தில் குழிகள் அமைப்பதனால் பாதிக்கப்பட்ட வயல்களில் இருந்து பரவுவதை தவிர்க்கலாம்.

விவசாயிகள் பாசலான், டைமீத்தேயேட், மாலத்தையான், மீத்தைல்மத்தான், டைகுளோரோவாஸ் போன்றவற்றை வயலுக்கு தெளிக்கலாம். இதன் மூலம் பயிரை தாக்கும் பூச்சியினங்களின் தாக்குதல் குறையும்.

மழைக்காலங்களில் நிலக்கடலை பயிரை பூச்சிகளின் தாக்குதலிருந்து பாதுகாக்க விவசாயிகள் முறையான ஊட்டச்சத்து உரங்களை இடுதல் வேண்டும். வேளாண் துறையினரின் ஆலோசனை பெற்று அதன்படி கடைபிடித்தல் வேண்டும். மேலும், நிலக்கடலை பயிருக்கு இடையே ஊடுபயிராக துவரை மற்றும் தட்டைபயிரை பயிரிடலாம்.

ரோமப்புழு: அமாஸ்க்டா அல்பிஸ்ட்ரைக்கா, அமாஸ்க்டா மூரி

தாக்குதலின் அறிகுறிகள்

 • ரோமப்புழு இலையின் பச்சையத்தை சுரண்டி உண்ணும்
 • நன்கு வளர்ச்சியடைந்த புழு இலையின் நரம்பு பகுதியை விட்டு விட்டு இடைப்பட்ட இலைபகுதியை உண்டு சேதப்படுத்தும்
 • அதிகமாக தாக்கப்பட்ட செடிகள் ஆடு, மாடு மேய்த்தது போல் நுனிக்குருத்து வெட்டப்பட்டு காணப்படும்

பூச்சியின் அடையாளம்

 • புழு : பழுப்பு நிறத்திலிருக்கும், உடலின் மேற்பரப்பில் நீளமான சிகப்பு கலந்த பழுப்புநிற முடிகள் காணப்படும்.
 • அந்துப்பூச்சி : முன் இறகானது வெள்ளை நிறத்தில் பழுப்பு நிற கோடுகளுடன் காணப்பாடும், பின் இறகானது வெள்ளை நிறத்தில் கருப்பு நிற புள்ளிகளுடன் காணப்படும்.

அமாஸ்க்டா மூரி

அந்துப்பூச்சி : முன் இறகானது வெள்ளை நிறத்தில் பழுப்பு நிற கோடுகளுடன் காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறை

 • கோடைக்காலங்களில் நிலத்தை உழவு செய்து ரோமப்புழுவின் கூட்டுப்புழுக்களை அழிக்கலாம்.
 • விளக்குப் பொறியை 3-4 வீதம் அமைத்து அந்துப்பூச்சியை கவர்ந்து அழிக்கலாம். விளக்குப் பொறி வைத்திருக்கும் பகுதியில் முட்டைக்குவியலை சேகரித்து அழிக்கலாம்.
 • இளம் புழுக்களை கைகலால் சேகரித்து அழிக்கலாம்.
 • துவரை மற்றும் தட்டைப்பயிறு ஆகியவற்றை ஊடுகயிராக பயிர் செய்து இளம் புழுக்களை கட்டுப்படுத்தலாம்.
 • வயலைச் சுற்றிலும் 30 செ.மீ நிளம் மற்றும் 25 செ.மீ அகலம் இருக்கும் அளவிற்கு சிறிய அளவில் குழிகள் அமைத்து அதன் முலம் புழுக்களை அழிக்கலாம்.
 • பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக் கொல்லியைத் தெளிக்கவும்
 • பாசலான் 35 EC 750 மி.லி/எக்டர் என்ற அளவில் 375 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும் டைகுளோரோவாஸ் 76 EC 627 மி.லி/எக்டர்

வைரஸ் பெருக்கம்

 • அமாஸ்கடா அல்பிஸ்ட்ரைக்கா புழுவை வயலிலிருந்து சேகரித்து ஒரு நாள் இரவு முழுவதும் உணவு எதுவும் அழிக்காமல் தனிமைப்படுத்த வேண்டும். பின்பு நியுக்ளியஸ் வைரஸ் கலைவையால் நனைக்கப்பட்ட கேலோட்ரோபஸ் இலைகளை நன்கு காயவைத்து அந்த இலையை அல்பிஸ்ட்ரைக்கா புழுவிற்கு உணவாக 1 அல்லது 2 நாட்களுக்கு அளிக்க வேண்டும். அதன்பிறகு 3 வது நாளில் சுத்தமான கேலோட்ரோபஸ் இலைகளை உணவாக அளிக்க வேண்டும். அடுத்த 5 வது நாளில் புழுவனாது இறக்கும். இறந்த புழுவானது வைரஸ் தாக்குதலால் இளஞ்சிகப்பு நிறமாக மாறி, தலைப்பகுதியானது கீழே தொங்கி, இறுதியில் உடல் பகுதி வெடித்து காணப்படும் இந்நிலையில் இந்த பாதிக்கப்பட்ட புழுவை எடுத்து நன்கு சுத்தமான நிரில் ஊரவைத்து அதை அரைத்து சுத்தம் செய்து வைரஸ் கலவை தயாரிக்கலாம்.
 • ஒரு எக்கடருக்கு 750 புழுக்கள் வீதம் வைரஸ் கலவை தயாரிக்க தேவைப்படும். இதனுடன் ஒட்டும் திரவம் 250 மி.லி. அல்லது 350 லிட்டர், இந்த வைரஸ் கலவையை மாலை நேரத்தில் தெளிப்பது சிறந்தது.

சுருள்பூச்சி: அப்ரோஏரிமா மோடிசெலா

தாக்குதலின் அறிகுறிகள்

 • புழு இரண்டு அல்லது மூன்று இலைகளை ஒன்றாக பிணைத்துவிடும்
 • புழு இலையின் திசுக்களுக்கிடையே ஊடுருவிச் சென்று பச்சையத்தைச் சுரண்டி உண்ணும்
 • தாக்கப்பட்ட இலைகள் காய்ந்துவிடும்
 • சேதம் அதிகமாகும் நிலையில் தாக்கப்பட்ட பயிர்கள் தீயினால் எரிக்கப்பட்டது போல் காணப்படும்

பூச்சியின் அடையாளம்

 • முட்டை: வெள்ளை நிறமுடையது, பெண் அந்துப்பூச்சி இலையின் அடிப்புறத்தில் முட்டையைக் குவியல்களாக இடும்
 • புழு: பச்சை நிறமாகவும், கருமை நிறத்தலையையும் கொண்டிருக்கும்
 • அந்துப்பூச்சி: பழுப்பு நிறத்தில் இருக்கும், முன்னிறக்கையில் வெண்ணிற புள்ளிகளைக் கொண்டிருக்கும்

கட்டுப்படுத்தும் முறை

 • பொருளாதார சேத நிலை: 1 புழு/ மிட்டர் வரிசை
 • விளக்குக்கவர்ச்சி பொறியை எக்டர்க்கு 12 வீதம் அமைத்து அந்துப்பூச்சியை கவர்ந்து அழிக்கலாம்
 • பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக் கொல்லியைத் தெளிக்கவும்
 • டைமீத்தேயேட் 30 EC 660 மி.லி/ஹெக்டேர்
 • மாலத்தையான் 50 EC 1.25 மி.லி/ஹெக்டேர்
 • மீத்தைல்திமத்தான் 25% EC 1000 மி.லி/ஹெக்டேர்

பீகார் ரோமப்புழு: ஸ்பைலோசோமா ஆப்ளிக்குவா

தாக்குதலின் அறிகுறிகள்

 • இளம் புழு இலையின் அடிப்பகுதியை தொடர்ச்சியாக உண்டு சேதப்படுத்தும்
 • வளர்ச்சியடைந்த புழு இலையின் நடுப்பகுதியை விட்டுவிட்டு மற்ற பகுதிகளை உண்டு சேதப்படுத்தும்

பூச்சியின் அடையாளம்

 • முட்டை: பெண் அந்துப்பூச்சி இலைகளின் அடிப்புறத்தில் முட்டைக் குவியல்களாக இடும்
 • புழு: ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். உடலின் இரண்டு ஓரங்களிலும் மஞ்சள் நிற முடிகள் காணப்படும்
 • கூட்டுப்புழு: உதிர்ந்த ரோமங்களை கொண்டு கூடு கட்டி அதனுல் இருக்கும்
 • அந்துப்பூச்சி: ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். முன் இறக்கை பழுப்பு நிறமாகவும் இரண்டு கரும்புள்ளிகளைக் கொண்டிருக்கும்

கட்டுப்படுத்தும் முறை

 • கோடைக்காலங்களில் நிலத்தை உழவு செய்து ரோமப் புழுவின் கூட்டுப்புழுக்களை அழிக்கலாம்
 • ரோமப்புழு உண்ணக்கூடிய மாற்று பயிர் வகைகளையும் களைகளையும் சேகரித்து அகற்றிவிட வேண்டும்
 • தட்டைபயிறு, ஆமணக்கு மற்றம் காட்டாமணக்கு ஆகிய பயிர்களை வயலின் வரப்புகளில் கவர்ச்சி பயிராக பயிரிட்டு ரோமப்புழுவை சேகரித்து அழிக்கலாம்.
 • கைகலால் சேகரித்து அழிக்க வேண்டும்
 • கேலோட்டோரோபிஸ், காட்டமணக்கு மற்றும் பப்பாளி கிளைகளை வயிலில் வைத்து ரோமப்புழுவை கவர்ந்தியிலுத்து அழிக்கலாம்.
 • இயற்கை எதிரிகளான சிலந்தி பூச்சி, வெட்டுகிளி, எறும்புகள், தட்டான் ,பொறி வண்டுகள், பரக்கானிட் ஒட்டுண்ணி மற்றும் மஸ்கடைன் பூச்சி ஆகியவற்றை கொண்டு ரோமப்புழுவை கட்டுப்படுத்தலாம்.
 • நுண்ணுயிர் பூச்சிக்கொல்லி மருந்துகளை நீயுக்ளியார் பரலிஹெகட்ரோசிஸ் வைரஸை எக்டர்க்கு 500 வைரஸ் தாக்கிய புழுக்களிலிருந்து பெறப்படும் வைரஸ் நச்சு என்ற முறையில் தெளித்து இளம்புழுக்களை நன்கு கட்டுப்படுத்தலாம்.
 • பூச்சியின் தாக்குதல் பொருளாதார சேதநிலையைத் தாண்டும்பொழுது குயினால்பாஸ் 2 மிலி (அ) குளோர்பைரிபாஸ் 2.5 மிலி மருந்தை 1 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளித்து இளம் புழுவைக் கட்டுப்படுத்தலாம்.

அமெரிக்கன் காய் புழு: கெலிகோவெர்பா ஆர்மிஜீரா

தாக்குதலின் அறிகுறிகள்

 • புழுவானது இலை, மொட்டு மற்றும் மலர்களை உண்டு சேதப்படுத்தும்
 • புழு மொக்குகளில் ஊடுருவி சென்று, திசுவை உண்ணுகிறது

பூச்சியின் அடையாளம்

 • முட்டை: பெண் அந்துப்பூச்சி மஞ்சள் நிற முட்டைகளை தனித்தனியே இலையின் மேற்பகுதியில் இடுகின்றது
 • புழு: முட்டையிலிருந்து வெளிவரும் புழு பச்சை அல்லது பழுப்பு கலந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும்
 • அந்துப்பூச்சி: அந்துப்பூச்சியின் பழுப்புநிற முன் இறக்கையில் V – வடிவக் கோடு இருக்கும். பின் இறக்கையின் ஓரப்பகுதி அடர்ந்த பழுப்பு நிறத்தில் இருக்கும்

கட்டுப்படுத்தும் முறைகள்

 • கோடைக்காலங்களில் நிலத்தை ஆழமாக உழுதல் வேண்டும்
 • ஊடுபயிராக தட்டைபயிரை 5 அல்லது 6 வரிசைகளுக்கு இடையில் பயிர் செய்தால் பெண் அந்துப்பூச்சி முட்டைகளை தட்டைப்பயிரில் இடும். பின்னர் முட்டைகளை சேகரித்து அழிக்கலாம்.
 • இனக்கவர்ச்சிப் பொறியை எக்டர்க்கு 5 வீதம் அமைத்து ஆண் அந்துப்பூச்சியைக் கவர்ந்து அழிக்கலாம்.
 • முட்டை ஒட்டுண்ணியான ட்ரைக்கோகிரைமா கைலானிஸ் எக்டர்க்கு 1 லட்சம் (அ) கிரைசோபெர்லா கார்னியாவை எக்டர்க்கு 50,000 வீதம் நட்ட 50 நாட்களுக்கு பிறகு வெளியிட்டு காய்த்துளைப்பானை நன்குக் கட்டுப்படுத்தலாம்.
 • இயற்கை எதிரிகளான சிலந்தி பூச்சி, வெட்டுகிளி, எறும்புகள், தட்டான் ,பொறி வண்டுகள், பரக்கானிட் ஒட்டுண்ணி மற்றும் மஸ்கடைன் பூச்சை இவற்றை கொண்டு ரோமப்புழுவை கட்டுப்படுத்தலாம்.
 • பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக் கொல்லியைத் தெளிக்கவும்
 • குயினால்பாஸ் 2மிலி 1 லிட்டர் தண்ணீருடன் கலந்துத் தெளிக்கவும்
 • குளோர்பைரிபாஸ் 3 மிலி 1 லிட்டர் தண்ணீருடன் கலந்துத் தெளிக்கவும்
 • இமிடாகுளோபிரிட் 2 மி.லி1 லிட்டர் தண்ணீருடன் கலந்துத் தெளிக்கவும்

புகையிலை வெட்டுப்புழு: ஸ்போடாப்டிரா லிட்டுரா

தாக்குதலின் அறிகுறிகள்

 • முட்டையிலிருந்து வெளிவரும் இளம்புழு இலையைத் தொடர்ச்சியாக உண்டு சேதப்படுத்தும்
 • புழு இலையின் பச்சையத்தைச் சுரண்டி உண்ணும்

பூச்சியின் அடையாளம்

 • முட்டை: முட்டைக்குவியல்களாக பழுப்பு நிறத்திலிருக்கும்
 • புழு: இளம் பச்சைநிறத்தில் இருக்கும். உடலின் மேற்பரப்பில் கருமைநிறக் கோடுகள் காணப்படும்
 • அந்துப்பூச்சி: பழுப்புநிறத்தில் இருக்கும். முன் இறக்கையில் வெள்ளை நிறக்கோடும், பின் இறக்கையில் பழுப்புநிறக் கோடும் காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறை

 • பொருளாதார சேத நிலை: 8 முட்டை கூட்டம்/100 மிட்டர் வரிசை
 • ஆமணக்கு பொறிப் பயிராக நடவு செய்தால் பெண் அந்துப்பூச்சி முட்டையை ஆமணக்கு மற்றும் சூரியகாந்தி இலைகளின் மேற்புறத்தில் இடும்.
 • விளக்குப் பொறி அமைத்து அந்துப்பூச்சியைக் கவர்ந்து அழிக்கலாம்
 • முட்டை குவியலையும் புழுக்களையும் கைகலால் சேகரித்து அழிக்கலாம்
 • பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக் கொல்லியைத் தெளிக்கவும்
 • கார்ப்ரைல் 50 WP 2.0 கி.கி/ஹெக்டேர்
 • குயின்லாபாஸ் 25 EC 750 மி.லி /ஹெக்டேர்
 • டைகுளோரோவாஸ் 76 WSC 750 மி.லி /ஹெக்டேர்
 • டைபுளுபெச்சுரான் 25 WP 300-400 கி/ஹெக்டேர்
 • வேப்ப எண்ணெய் 2% 20 லி/ஹெக்டேர்
 • நஞ்சு உணவு (அரிசித்தவுடு 12.5 கி.கி +பனங்கட்டி 1.25 கி.கி+கார்பரைல் 1.25கி.கி +தண்ணீர் 7 லி )அமைத்து வளர்ச்சியடைந்த புழுவை கட்டுப்படுத்தலாம்.
 • நீயுக்ளியார் பாலிஹெட்ரோசிஸ் வைரஸை (3X1012 POB/ha) பயன்படுத்தி காய் புழுவினை அழிக்கலாம்
 • ஊடு பயிராக அவரை + நிலக்கடலை- 1:4 விகிதத்தில் பயிர் செய்து பூழுக்களின் தாகுத்தலை கட்டுப்படுத்தலாம்.
 • பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக் கொல்லியைத் தெளித்து வளர்ச்சியடைந்த புழுக்களை கட்டுப்படுத்தலாம்.
 • இமிடாகுளோபிரிட் 17.8% SL100-125 மி.லி /ஹெக்டேர்
 • குயின்லாபாஸ் 25% EC 1400 மி.லி /ஹெக்டேர்

நிலக்கடலை மொக்குத்துளைப்பான்: அனார்சியா எபிபையாஸ்

தாக்குதலின் அறிகுறிகள்

 • புழு மொட்டுக்களையும், குருத்துக்களையும் துளைத்து உட்சென்று உண்கிறது
 • ஆரம்ப நிலையில் சிறிய துளைகள் இலைகளில் காணப்படும்
 • சேதம் அதிகமாகும் போது அதிக எண்ணிக்கையில் இலைகளில் துளைகள் காணப்படும்

பூச்சியின் அடையாளம்

 • புழு: சாக்லைட் போன்று பழுப்பு நிறத்தில் இருக்கும்.

கட்டுப்படுத்தும் முறை

 • வேப்பம் எண்ணெய் 3 சதம் (அ) நொச்சி சாறு 5 சதம் ஆகியவற்றைத் தெளித்து வளர்ச்சியடைந்தப் புழுவைக் கட்டுப்படுத்தலாம்
 • கூட்டுப்புழு ஒட்டுண்ணியான பிராக்கிமெரியாவை பயன்படுத்தி அந்துப்பூச்சியின் கூட்டுப்புழக்களை அழிக்கலாம்

அசுவினி: ஏபிஸ் கிராசிவோரா

தாக்குதலின் அறிகுறிகள்

 • குஞ்சுகளும், வளர்ந்த பூச்சியும் இலைகள் மற்றும் குருத்துக்களின் சாறை உறிஞ்சுகிறது
 • தாக்கப்பட்ட பயிர்களில் இலைகள் மற்றும் தண்டுகள் வளர்ச்சிக் குன்றி காணப்படும்
 • குஞ்சுகள் தேன் போன்ற கழிவுத் திரவத்தை இலைகளின் மேற்புறத்தில் சுரக்க செய்கின்றது
 • தாக்கப்பட்ட இலைகள் கேப்னோடியம் என்ற பூஞ்சையினால் கவரப்பட்டு கருமையாக மாறி காய்ந்து விடுகிறது
 • இப்பூச்சியின் தாக்குதலால், நிலக்கடலை ரோஜா இதழுக்கு வைரஸ் நோய் பரவுகிறது

பூச்சியின் அடையாளம்

 • அசுவினி: பூச்சியானது சிகப்பு நிறத்தில் காணப்படும், அதன் வயிற்றுப் பகுதியில் கனுக்கள் காணப்படும்

கட்டுப்படுத்தும் முறை

 • பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக் கொல்லியைத் தெளிக்கவும்
 • குளோரோபைரிபாஸ் 20% EC 1000 மி.லி /ஹெக்டேர்
 • இமிடாகுளோபிரிட் 17.8% SL100-125 மி.லி /ஹெக்டேர்
 • மீத்தைல்திமத்தான் 25% EC 1000 மி.லி /ஹெக்டேர்

தத்துப்பூச்சி: எம்போஸ்கா கெரி

தாக்குதலின் அறிகுறிகள்

 • குஞ்சுகளும், வளர்ந்த பூச்சியும் இலைகளின் சாறை உறிஞ்சுகிறது
 • வளர்ந்த பூச்சிகள் விஷத்தன்மையுள்ள உமிழ்நீரை உட்செலுத்துவதால் தாக்கப்பட்ட இலைகளில் உள்ள நரம்புகளால் வெண்மையாக மாறி விடுகிறது
 • சேதம் அதிகமாகும் போது பயிர்கள் தீயினால் எரிந்தது போல் காணப்படும்

பூச்சியின் அடையாளம்

 • அந்துப்பூச்சி: வளர்ந்த பூச்சிகள் பச்சை நிறத்தில் இருக்கும்

கட்டுப்படுத்தும் முறை

 • நிலத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்
 • பயிர் சுழற்சி முறையை கையாள வேண்டும்
 • ஊடுபயிராக கம்பை பயிர் செய்வதால் தத்துப் புச்சியைக் கட்டுப்படுத்தலாம்
 • ஆமணக்கு – நிலக்கடலை ஊடுபயிரை தவிர்த்தல் வேண்டும்
 • டைமீத்தோயேட் 650 மிலி மருந்தை ஹெக்டர்க்கு 600 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்

இலைப்பேன்: ஸ்கிரிப்டோத்ரிப்ஸ் டார்சாலிஸ்

தாக்குதலின் அறிகுறிகள்

 • குஞ்சுகளும், வளர்ந்த பூச்சியின் இலைகளின் அடிப்புறத்திலிருந்து சாறை உறிஞ்சுகிறது.
 • தாக்கப்பட்ட இலைகளின் மேற்பரப்பில் மஞ்சள் கலந்த பச்சை நிறத்திட்டுக்களும், கீழ்பரப்பில் பழுப்பு நிறத்திட்டுகளும் காணப்படும்.

பூச்சியின் அடையாளம்

 • குஞ்சுகள்: மஞ்சள் நிறத்தில் இருக்கும்
 • இலைப்பேன்: கருமை நிறமாகவும், மயிரிழைகளால் ஆன இறகுகளைக் கொண்டிருக்கும்.

கேலோதிரிப்ஸ் இன்டிகஸ்

தாக்குதலின் அறிகுறிகள்

 • இலைகளில் வெள்ளை நிற புள்ளிகள் காணப்படும்

பூச்சியின் அடையாளம்

 • இலைப்பேன் – கருமை நிறமாகவும், மயிரிழை போன்ற இறக்கைகளைக் கொண்டிருக்கும்

பிரன்கிலினியெல்லா ஸ்குல்ட்டுசி

தாக்குதலின் அறிகுறிகள்

 • நுனி இலைகள் சுருண்டுவிடும்
 • குருத்து அழுகல் நோயை பரப்புகிறது.

பூச்சியின் அடையாளம்

 • குஞ்சுகள்: மஞ்சள் நிறமுடையது.
 • இலைப்பேன்: கருமை நிறமாகவும், மயிரிழை போன்ற இறக்கைகளைக் கொண்டிருக்கும்.

கட்டுப்படுத்தும் முறை

 • குயின்லாபாஸ் 25% EC 1400 மி.லி /எக்கடர்

பொன்வண்டு: ஸ்பினோடீரா இண்டிகா

தாக்குதலின் அறிகுறிகள்

 • தாக்கப்பட்ட செடிகள் காய்ந்துவிடும்
 • புழு தண்டினைத் துளைத்து உட்சென்று உண்ணும்
 • தாக்கப்பட்ட செடிகளை பிடுங்கினால் அதற்கு அடியில் புழு மற்றும் கூட்டுப்புழுக்கள் காணப்படும்

பூச்சியின் அடையாளம்

 • புழு: பழுப்பு நிறமுடையது, மெதுவாக நகரக்கூடியது
 • வண்டு: பளப்பளப்பாக, சிகப்பு (அ) பச்சை நிறத்திலிருக்கும்

கட்டுப்படுத்தும் முறை

 • கோடைக்காலங்களில் நிலத்தை ஆழமாக உழுதல் வேண்டும்
 • நன்கு மட்கிய தொழு உரங்களை இட வேண்டும்
 • பாதிக்கப்பட்ட செடிகளை பிடுங்கி அகற்றிவிட வேண்டும்.
 • ஒட்டுண்ணிகளான பிராக்னிட்ஸ்,ட்ரைக்கோகேரமிட்ஸ் மற்றும் நிக்கிளியிஸ் வைரஸ்,பச்சை மஸ்கட்ரைன் பூச்சை ஆகியவற்றை கொண்டு கட்டுப்படுத்தலாம்.
 • கார்போபீயுரான் குருணை மருந்தினை ஹெக்டர்க்கு 2.25 கிலோ வீதம் தூவி பொன்வண்டின் தாக்குதலைத் தவிர்க்கலாம்

கரையான்: ஓடோனோடெர்மஸ் ஒபிசஸ்

தாக்குதலின் அறிகுறிகள்

 • தாக்கப்பட்ட செடிகள் காய்ந்து விடும்
 • கரையான் வேரினுள் நுழைந்து உட்சென்று உண்ணுகிறது
 • காய்களில் சிறியத்துளைகள் காணப்படும்

பூச்சியின்அடையாளம்

 • கரையான் கூட்டமாக புற்றுக்குள் வாழும்.இதில் வேலைக்கார கரையான் ராஜா,ராணி கரையான் என மூன்று வகை காணப்படும்
 • வேலைக்காரகரையான்: சிறியதாகவும், மென்மைான உடலையும், புழுப்பு நிற தலையையும் கொண்டு சுமார் 4மில்லி மீட்டர் அளவு இருக்கும்

கட்டுப்படுத்தும் முறை

 • கடப்பாரைக் கொண்டு கரையான் புற்றை கொத்தி அகற்ற வேண்டும்
 • நன்கு மக்கிய இயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டும்
 • இடைச்சாகுபடி முறைகளை தொடர்ச்சியாக கையாள்வதன் மூலம் கரையான் பாதிப்பைத் தவிர்க்கலாம்
 • குளோரோபைரிபாஸ் 20 EC
 • விதை நடவுக்கு முன்பாக குளோர்பைரிபாஸ் தூளை ஹெக்டர்க்கு 30-40 கிலோ வீதம் தூவி கரையானைக் கட்டுப்படுத்தலாம்
 • விதை நேர்த்தி செய்த நிலக்கடலை விதைக்க வேண்டும் (1 கிலோ நிலக்கடலை + 6.5 மிலி குளோர்பைரிபாஸ்)

வெள்ளைப்புழு: கோலோட்ரைக்கியா செரோட்டா

தாக்குதலின் அறிகுறிகள்

 • புழு வேர்களையும், காய்களையும் உண்டு சேதப்படுத்தும்
 • தாக்கப்பட்ட செடிகள் காய்ந்து மடிந்துவிடும்

பூச்சியின் அடையாளம்

 • முட்டை: உருண்டையாகவும், வெள்ளை நிறத்திலும் இருக்கும்
 • புழு: புழு வெள்ளைக் கலந்த மஞ்சள் நிறமாகவும், C வடிவிலும் இருக்கும்

கட்டுப்படுத்தும் முறை

 • பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக் கொல்லியைத் தெளிக்கவும்
 • கார்போபியுரான் 3% CG 33.3 கி.கி/ஹெக்டேர்
 • குளோரோபைரிபாஸ் 20% EC 1000 மி.லி /ஹெக்டேர்
 • போரேட் 10 CG 25 கி.கி/ஹெக்டேர்

காய் துளைப்பான்: அனிசோலேபிஸ் ஸ்டாலி

தாக்குதலின் அறிகுறிகள்

 • இளம் காய்களை புழு துளைத்து உட்சென்று உண்கிறது
 • தாக்கப்பட்ட காய்களில் பருப்பு (அ) கொட்டைகள் இருக்காது

பூச்சியின் அடையாளம்

 • புழு: ஆரம்ப நிலையில் வெள்ளையாகவும் இறுதியில் பழுப்புநிறத்திலும் இருக்கும்
 • அந்துப்பூச்சி: பழுப்பு நிறத்தில் இருக்கும். கருமை நிறத்தில் மலவாய்க் கொம்புகள் காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறை

 • பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக் கொல்லியை விதைத்த 40 வது நாளில் மண்ணில் இட்டு காய்துளைப்பானை கட்டுப்படுத்தலாம்.
 • மாலத்தையான் 5 D 25 கி.கி/ஹெக்டேர்
 • கார்போபியுரான் 3% CG 50 கி.கி/ஹெக்டேர்

காய் பூச்சி: எலோசமோலோமஸ் சாரிடிட்ஸ்

தாக்குதலின் அறிகுறிகள்

 • அறுவடை செய்த காய்கள் சுருங்கிய பருப்புகளைக் கொண்டிருக்கும்

பூச்சியின் அடையாளம்

 • குஞ்சுகள்: இளம்சிவப்பு நிறத்தில் இருக்கும்
 • பூச்சி: பழுப்பு நிறத்தில் இருக்கும்

கட்டுப்படுத்தும் முறை

 • எக்டர்க்கு மாலத்தியான் 25 கிலோ தூளை மண்ணில் மேல் தூவிய பிறகு விதை நடவு செய்ய வேண்டும்
 • குயின்லாபாஸ் 25% EC அல்லது மேற் கூரிய பூச்சிக் கொல்லியைத் விதைத்த 40 வது நாளில் மண்ணில் இட்டு காய் பூச்சியைக் கட்டுப்படுத்தலாம்.

நிலக்கடலை பயிரை பூச்சிகளிடமிருந்து பாதுகாக்க எளிய வழிமுறைகள்

தமிழகத்தில் சாகுபடி செய்யப்படும் எண்ணெய் வித்து பயிரில் நிலக்கடலை முக்கியமானது.

நிலக்கடலை பயிரிட முறையான பாத்தி அமைத்தல், உரமிடுதல், நுண் ஊட்டமிடுதல், ஊட்டச்சத்து கலவை தெளிப்பு, விதை நேர்த்தி, களை கட்டுபாடு, பாசனம் செய்தல் அவசியம். பூச்சி மேலாண்மையிலும் விவசாயிகள் அக்கறை காட்ட வேண்டும்.

மழைக்காலத்தில் நிலக்கடலை பயிரில் ரோமப்புழு, சுருள் பூச்சியின் தாக்குதல் அதிகமாக இருக்கும். இதைக் கட்டுபடுத்த, கோடை காலத்தில் நிலத்தை உழவு செய்து ரோமப்புழுக்களின் கூட்டுப்புழுக்களை அழிக்க வேண்டும்.

விளக்குப் பொறி, தீப்பந்தம் வைத்து கவர்ந்து அழிக்க வேண்டும். பயிர்களில் இடப்பட்டுள்ள முட்டைகளை சேகரித்து அழிக்க வேண்டும். வயலை சுற்றிலும் 30 முதல் 25 செ.மீ அகலத்தில் குழிகள் அமைப்பதனால் பாதிக்கப்பட்ட வயல்களில் இருந்து பரவுவதை தவிர்க்கலாம்.

விவசாயிகள் பாசலான், டைமீத்தேயேட், மாலத்தையான், மீத்தைல்மத்தான், டைகுளோரோவாஸ் போன்றவற்றை வயலுக்கு தெளிக்கலாம். இதன் மூலம் பயிரை தாக்கும் பூச்சியினங்களின் தாக்குதல் குறையும்.

வேளாண்மை துறை இணை இயக்குனர் சம்பத்குமார் கூறுகையில்,” மழைக்காலங்களில் நிலக்கடலை பயிரை பூச்சிகளின் தாக்குதலிருந்து பாதுகாக்க விவசாயிகள் முறையான ஊட்டச்சத்து உரங்களை இடுதல் வேண்டும். வேளாண் துறையினரின் ஆலோசனை பெற்று அதன்படி கடைபிடித்தல் வேண்டும். மேலும், நிலக்கடலை பயிருக்கு இடையே ஊடுபயிராக துவரை மற்றும் தட்டைபயிரை பயிரிடலாம்’,

ரோமப்புழு: அமாஸ்க்டா அல்பிஸ்ட்ரைக்கா, அமாஸ்க்டா மூரி

தாக்குதலின் அறிகுறிகள்

ரோமப்புழு இலையின் பச்சையத்தை சுரண்டி உண்ணும்

நன்கு வளர்ச்சியடைந்த புழு இலையின் நரம்பு பகுதியை விட்டு விட்டு இடைப்பட்ட இலைபகுதியை உண்டு சேதப்படுத்தும்

அதிகமாக தாக்கப்பட்ட செடிகள் ஆடு, மாடு மேய்த்தது போல் நுனிக்குருத்து வெட்டப்பட்டு காணப்படும்

பூச்சியின் அடையாளம்

புழு

பழுப்பு நிறத்திலிருக்கும், உடலின் மேற்பரப்பில் நீளமான சிகப்பு கலந்த பழுப்புநிற முடிகள் காணப்படும்.

அந்துப்பூச்சி

முன் இறகானது வெள்ளை நிறத்தில் பழுப்பு நிற கோடுகளுடன் காணப்பாடும், பின் இறகானது வெள்ளை நிறத்தில் கருப்பு நிற புள்ளிகளுடன் காணப்படும்.

அமாஸ்க்டா மூரி:

அந்துப்பூச்சி

முன் இறகானது வெள்ளை நிறத்தில் பழுப்பு நிற கோடுகளுடன் காணப்படும்.

புழு அந்துப்பூச்சி

கட்டுப்படுத்தும் முறை

கோடைக்காலங்களில் நிலத்தை உழவு செய்து ரோமப்புழுவின் கூட்டுப்புழுக்களை அழிக்கலாம்.

விளக்குப் பொறியை 3-4 வீதம் அமைத்து அந்துப்பூச்சியை கவர்ந்து அழிக்கலாம். விளக்குப் பொறி வைத்திருக்கும் பகுதியில் முட்டைக்குவியலை சேகரித்து அழிக்கலாம்.

இளம் புழுக்களை கைகலால் சேகரித்து அழிக்கலாம்.

துவரை மற்றும் தட்டைப்பயிறு ஆகியவற்றை ஊடுகயிராக பயிர் செய்து இளம் புழுக்களை கட்டுப்படுத்தலாம்.

வயலைச் சுற்றிலும் 30 செ.மீ நிளம் மற்றும் 25 செ.மீ அகலம் இருக்கும் அளவிற்கு சிறிய அளவில் குழிகள் அமைத்து அதன் முலம் புழுக்களை அழிக்கலாம்.

பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக் கொல்லியைத் தெளிக்கவும்

பாசலான் 35 EC 750 மி.லி/எக்கடர் என்ற அளவில் 375 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும் டைகுளோரோவாஸ் 76 EC 627 மி.லி/எக்கடர்

வைரஸ் பெருக்கம்

அமாஸ்கடா அல்பிஸ்ட்ரைக்கா புழுவை வயலிருந்து சேகரித்து ஒரு நாள் இரவு முழுவதும் உணவு எதுவும் அழிக்காமல் தனிமைப்படுத்த வேண்டும். பின்பு நியுக்ளியஸ் வைரஸ் கலைவையால் நனைக்கப்பட்ட கேலோட்ரோபஸ் இலைகளை நன்கு காயவைத்து அந்த இலையை அல்பிஸ்ட்ரைக்கா புழுவிற்கு உணவாக 1 அல்லது 2 நாட்களுக்கு அளிக்க வேண்டும். அதன்பிறகு 3 வது நாளில் சுத்தமான கேலோட்ரோபஸ் இலைகளை உணவாக அளிக்க வேண்டும். அடுத்த 5 வது நாளில் புழுவனாது இறக்கும் .இறந்த புழுவானது வைரஸ் தாக்குதலால் இளஞ்சிகப்பு நிறமாக மாறி,தலைப்பகுதியானது கீழே தொங்கி,இறுதில் உடல் பகுதி வெடித்து காணப்படும் இந்நிலையில் இந்த பாதிக்கப்பட்ட புழுவை எடுத்து நண்கு சுத்தமான நிரில் ஊரவைத்து அதை அரைத்து சுத்தம் செய்து வைரஸ் கலவை தாயரிக்கலாம்.

ஒரு எக்கடருக்கு 750 புழுக்கள் வீதம் வைரஸ் கலவை தயாரிக்க தேவைப்படும்.இதனுடன் ஒட்டும் திரவம் 250 மி.லி. அல்லது 350 லிட்டர்,இந்த வைரஸ் கலவையை மாலை நேரத்தில் தெளிப்பது சிறந்தது.

சுருள்பூச்சி: அப்ரோஏரிமா மோடிசெலா

தாக்குதலின் அறிகுறிகள்:

புழு இரண்டு அல்லது மூன்று இலைகளை ஒன்றாக பிணைத்துவிடும்

புழு இலையின் திசுக்களுக்கிடையே ஊடுருவிச் சென்று பச்சையத்தைச் சுரண்டி உண்ணும்

தாக்கப்பட்ட இலைகள் காய்ந்துவிடும்

சேதம் அதிகமாகும் நிலையில் தாக்கப்பட்ட பயிர்கள் தீயினால் எரிக்கப்பட்டது போல் காணப்படும்

பூச்சியின் அடையாளம்:

முட்டை: வெள்ளை நிறமுடையது, பெண் அந்துப்பூச்சி இலையின் அடிப்புறத்தில் முட்டையைக் குவியல்களாக இடும்

புழு: பச்சை நிறமாகவும், கருமை நிறத்தலையையும் கொண்டிருக்கும்

அந்துப்பூச்சி: பழுப்பு நிறத்தில் இருக்கும், முன்னிறக்கையில் வெண்ணிற புள்ளிகளைக் கொண்டிருக்கும்

கட்டுப்படுத்தும் முறை:

பொருளாதார சேத நிலை: 1 புழு/ மிட்டர் வரிசை

விளக்குக்கவர்ச்சி பொறியை எக்டர்க்கு 12 வீதம் அமைத்து அந்துப்பூச்சியை கவர்ந்து அழிக்கலாம்

பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக் கொல்லியைத் தெளிக்கவும்

டைமீத்தேயேட் 30 EC 660 மி.லி/ஹெக்டேர்

மாலத்தையான் 50 EC 1.25 மி.லி/ஹெக்டேர்

மீத்தைல்திமத்தான் 25% EC 1000 மி.லி/ஹெக்டேர்

பீகார் ரோமப்புழு: ஸ்பைலோசோமா ஆப்ளிக்குவா

தாக்குதலின் அறிகுறிகள்:

இளம் புழு இலையின் அடிப்பகுதியை தொடர்ச்சியாக உண்டு சேதப்படுத்தும்

வளர்ச்சியடைந்த புழு இலையின் நடுப்பகுதியை விட்டுவிட்டு மற்ற பகுதிகளை உண்டு சேதப்படுத்தும்

பூச்சியின் அடையாளம்:

முட்டை: பெண் அந்துப்பூச்சி இலைகளின் அடிப்புறத்தில் முட்டைக் குவியல்களாக இடும்

புழு: ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். உடலின் இரண்டு ஓரங்களிலும் மஞ்சள் நிற முடிகள் காணப்படும்

கூட்டுப்புழு: உதிர்ந்த ரோமங்களை கொண்டு கூடு கட்டி அதனுல் இருக்கும்

அந்துப்பூச்சி: ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். முன் இறக்கை பழுப்பு நிறமாகவும் இரண்டு கரும்புள்ளிகளைக் கொண்டிருக்கும்

கட்டுப்படுத்தும் முறை:

கோடைக்காலங்களில் நிலத்தை உழவு செய்து ரோமப் புழுவின் கூட்டுப்புழுக்களை அழிக்கலாம்

ரோமப்புழு உண்ணக்கூடிய மாற்று பயிர் வகைகளையும் களைகளையும் சேகரித்து அகற்றிவிட வேண்டும்

தட்டைபயிறு, ஆமணக்கு மற்றம் காட்டாமணக்கு ஆகிய பயிர்களை வயலின் வரப்புகளில் கவர்ச்சி பயிராக பயிரிட்டு ரோமப்புழுவை சேகரித்து அழிக்கலாம்.

கைகலால் சேகரித்து அழிக்க வேண்டும்

கேலோட்டோரோபிஸ், காட்டமணக்கு மற்றும் ப்பபாளி கிளைகளை வயிலில் வைத்து ரோமப்புழுவை கவர்ந்தியிலுத்து அழிக்கலாம்.

இயற்கை எதிரிகளான சிலந்தி பூச்சி, வெட்டுகிளி, எறும்புகள், தட்டான் ,பொறி வண்டுகள் ,பரக்கானிட் ஒட்டுண்ணி மற்றும் மஸ்கடைன் பூச்சை இவற்றை கொண்டு ரோமப்புழுவை கட்டுப்படுத்தலாம்.

நுண்ணுயிர் பூச்சிக்கொல்லி மருந்துகளை நீயுக்ளியார் பரலிஹெகட்ரோசிஸ் வைரஸை எக்டர்க்கு 500 வைரஸ் தாக்கிய புழுக்களிலிருந்து பெறப்படும் வைரஸ் நச்சு என்ற முறையில் தெளித்து இளம்புழுக்களை நன்கு கட்டுப்படுத்தலாம்.

பூச்சியின் தாக்குதல் பொருளாதார சேதநிலையைத் தாண்டும்பொழுது குயினால்பாஸ் 2 மிலி (அ) குளோர்பைரிபாஸ் 2.5 மிலி மருந்தை 1 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளித்து இளம் புழுவைக் கட்டுப்படுத்தலாம்.

அமெரிக்கன் காய் புழு: கெலிகோவெர்பா ஆர்மிஜீரா

தாக்குதலின் அறிகுறிகள்:

புழுவானது இலை, மொட்டு மற்றும் மலர்களை உண்டு சேதப்படுத்தும்

புழு மொக்குகளில் ஊடுருவி சென்று, திசுவை உண்ணுகிறது

பூச்சியின் அடையாளம்:

முட்டை: பெண் அந்துப்பூச்சி மஞ்சள் நிற முட்டைகளை தனித்தனியே இலையின் மேற்பகுதியில் இடுகின்றது

புழு: முட்டையிலிருந்து வெளிவரும் புழு பச்சை அல்லது பழுப்பு கலந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும்

அந்துப்பூச்சி: அந்துப்பூச்சியின் பழுப்புநிற முன் இறக்கையில் V – வடிவக் கோடு இருக்கும். பின் இறக்கையின் ஓரப்பகுதி அடர்ந்த பழுப்பு நிறத்தில் இருக்கும்

கட்டுப்படுத்தும் முறைகள்:

கோடைக்காலங்களில் நிலத்தை ஆழமாக உழுதல் வேண்டும்

ஊடுபயிராக தட்டைபயிரை 5 அல்லது 6 வரிசைகளுக்கு இடையில் பயிர் செய்தால் பெண் அந்துப்பூச்சி முட்டைகளை தட்டைப்பயிரில் இடும். பின்னர் முட்டைகளை சேகரித்து அழிக்கலாம்.

இனக்கவர்ச்சிப் பொறியை எக்டர்க்கு 5 வீதம் அமைத்து ஆண் அந்துப்பூச்சியைக் கவர்ந்து அழிக்கலாம்.

முட்டை ஒட்டுண்ணியான ட்ரைக்கோகிரைமா கைலானிஸ் எக்டர்க்கு 1 லட்சம் (அ) கிரைசோபெர்லா கார்னியாவை எக்டர்க்கு 50,000 வீதம் நட்ட 50 நாட்களுக்கு பிறகு வெளியிட்டு காய்த்துளைப்பானை நன்குக் கட்டுப்படுத்தலாம்.

இயற்கை எதிரிகளான சிலந்தி பூச்சி,வெட்டுகிளி,எறும்புகள், தட்டான் ,பொறி வண்டுகள் ,பரக்கானிட் cட்டுண்ணி மற்றும் மஸ்கடைன் பூச்சை இவற்றை கொண்டு ரோமப்புழுவை கட்டுப்படுத்தலாம்.

பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக் கொல்லியைத் தெளிக்கவும்

குயினால்பாஸ் 2மிலி 1 லிட்டர் தண்ணீருடன் கலந்துத் தெளிக்கவும்

குளோர்பைரிபாஸ் 3 மிலி 1 லிட்டர் தண்ணீருடன் கலந்துத் தெளிக்கவும்

இமிடாகுளோபிரிட் 2 மி.லி1 லிட்டர் தண்ணீருடன் கலந்துத் தெளிக்கவும்

புகையிலை வெட்டுப்புழு: ஸ்போடாப்டிரா லிட்டுரா

தாக்குதலின் அறிகுறிகள்:

முட்டையிலிருந்து வெளிவரும் இளம்புழு இலையைத் தொடர்ச்சியாக உண்டு சேதப்படுத்தும்

புழு இலையின் பச்சையத்தைச் சுரண்டி உண்ணும்

பூச்சியின் அடையாளம்:

முட்டை: முட்டைக்குவியல்களாக பழுப்பு நிறத்திலிருக்கும்

புழு: இளம் பச்சைநிறத்தில் இருக்கும். உடலின் மேற்பரப்பில் கருமைநிறக் கோடுகள் காணப்படும்

அந்துப்பூச்சி: பழுப்புநிறத்தில் இருக்கும். முன் இறக்கையில் வெள்ளை நிறக்கோடும், பின் இறக்கையில் பழுப்புநிறக் கோடும் காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறை:

பொருளாதார சேத நிலை: 8 முட்டை கூட்டம்/100 மிட்டர் வரிசை

ஆமணக்கு பொறிப் பயிராக நடவு செய்தால் பெண் அந்துப்பூச்சி முட்டையை ஆமணக்கு மற்றும் சூரியகாந்தி இலைகளின் மேற்புறத்தில் இடும்.

விளக்குப் பொறி அமைத்து அந்துப்பூச்சியைக் கவர்ந்து அழிக்கலாம்

முட்டை குவியலையும் புழுக்களையும் கைகலால் சேகரித்து அழிக்கலாம்

பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக் கொல்லியைத் தெளிக்கவும்

கார்ப்ரைல் 50 WP 2.0 கி.கி/ஹெக்டேர்

குயின்லாபாஸ் 25 EC 750 மி.லி /ஹெக்டேர்

டைகுளோரோவாஸ் 76 WSC 750 மி.லி /ஹெக்டேர்

டைபுளுபெச்சுரான் 25 WP 300-400 கி/ஹெக்டேர்

வேப்ப எண்ணெய் 2% 20 லி/ஹெக்டேர்

நஞ்சு உணவு (அரிசித்தவுடு 12.5 கி.கி +பனங்கட்டி 1.25 கி.கி+கார்பரைல் 1.25கி.கி +தண்ணீர் 7 லி)அமைத்து வளர்ச்சியடைந்த புழுவை கட்டுப்படுத்தலாம்.

நீயுக்ளியார் பாலிஹெட்ரோசிஸ் வைரஸை (3X1012 POB/ha) பயன்படுத்தி காய் புழுவினை அழிக்கலாம்

ஊடு பயிராக அவரை + நிலக்கடலை- 1:4 விகிதத்தில் பயிர் செய்து பூழுக்களின் தாகுத்தலை கட்டுப்படுத்தலாம்.

பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக் கொல்லியைத் தெளித்து வளர்ச்சியடைந்த புழுக்களை கட்டுப்படுத்தலாம்.

இமிடாகுளோபிரிட் 17.8% SL100-125 மி.லி /ஹெக்டேர்

குயின்லாபாஸ் 25% EC 1400 மி.லி /ஹெக்டேர்

நிலக்கடலை மொக்குத்துளைப்பான்: அனார்சியா எபிபையாஸ்

தாக்குதலின் அறிகுறிகள்:

புழு மொட்டுக்களையும், குருத்துக்களையும் துளைத்து உட்சென்று உண்கிறது

ஆரம்ப நிலையில் சிறிய துளைகள் இலைகளில் காணப்படும்

சேதம் அதிகமாகும் போது அதிக எண்ணிக்கையில் இலைகளில் துளைகள் காணப்படும்

பூச்சியின் அடையாளம்:

புழு: சாக்லைட் போன்று பழுப்பு நிறத்தில் இருக்கும்.

கட்டுப்படுத்தும் முறை:

வேப்பம் எண்ணெய் 3 சதம் (அ) நொச்சி சாறு 5 சதம் ஆகியவற்றைத் தெளித்து வளர்ச்சியடைந்தப் புழுவைக் கட்டுப்படுத்தலாம்

கூட்டுப்புழு ஒட்டுண்ணியான பிராக்கிமெரியாவை பயன்படுத்தி அந்துப்பூச்சியின் கூட்டுப்புழக்களை அழிக்கலாம

அசுவினி: ஏபிஸ் கிராசிவோரா

தாக்குதலின் அறிகுறிகள்:

குஞ்சுகளும், வளர்ந்த பூச்சியும் இலைகள் மற்றும் குருத்துக்களின் சாறை உறிஞ்சுகிறது

தாக்கப்பட்ட பயிர்களில் இலைகள் மற்றும் தண்டுகள் வளர்ச்சிக் குன்றி காணப்படும்

குஞ்சுகள் தேன் போன்ற கழிவுத் திரவத்தை இலைகளின் மேற்புறத்தில் சுரக்க செய்கின்றது

தாக்கப்பட்ட இலைகள் கேப்னோடியம் என்ற பூஞ்சையினால் கவரப்பட்டு கருமையாக மாறி காய்ந்து விடுகிறது

இப்பூச்சியின் தாக்குதலால், நிலக்கடலை ரோஜா இதழுக்கு வைரஸ் நோய் பரவுகிறது

பூச்சியின் அடையாளம்:

அசுவினி: பூச்சியானது சிகப்பு நிறத்தில் காணப்படும் ,அதன் வயிற்றுப் பகுதியில் கனுக்கள் காணப்படும்

கட்டுப்படுத்தும் முறை:

பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக் கொல்லியைத் தெளிக்கவும்

குளோரோபைரிபாஸ் 20% EC 1000 மி.லி /ஹெக்டேர்

இமிடாகுளோபிரிட் 17.8% SL100-125 மி.லி /ஹெக்டேர்

மீத்தைல்திமத்தான் 25% EC 1000 மி.லி /ஹெக்டேர்

தத்துப்பூச்சி: எம்போஸ்கா கெரி

தாக்குதலின் அறிகுறிகள்:

குஞ்சுகளும், வளர்ந்த பூச்சியும் இலைகளின் சாறை உறிஞ்சுகிறது

வளர்ந்த பூச்சிகள் விஷத்தன்மையுள்ள உமிழ்நீரை உட்செலுத்துவதால் தாக்கப்பட்ட இலைகளில் உள்ள நரம்புகளால் வெண்மையாக மாறி விடுகிறது

சேதம் அதிகமாகும் போது பயிர்கள் தீயினால் எரிந்தது போல் காணப்படும்

பூச்சியின் அடையாளம்:

அந்துப்பூச்சி: வளர்ந்த பூச்சிகள் பச்சை நிறத்தில் இருக்கும்

கட்டுப்படுத்தும் முறை:

நிலத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்

பயிர் சுழற்சி முறையை கையாள வேண்டும்

ஊடுபயிராக கம்பை பயிர் செய்வதால் தத்துப் புச்சியைக் கட்டுப்படுத்தலாம்

ஆமணக்கு – நிலக்கடலை ஊடுபயிரை தவிர்த்தல் வேண்டும்

டைமீத்தோயேட் 650 மிலி மருந்தை ஹெக்டர்க்கு 600 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்

இலைப்பேன்: ஸ்கிரிப்டோத்ரிப்ஸ் டார்சாலிஸ்

தாக்குதலின் அறிகுறிகள்:

குஞ்சுகளும், வளர்ந்த பூச்சியின் இலைகளின் அடிப்புறத்திலிருந்து சாறை உறிஞ்சுகிறது.

தாக்கப்பட்ட இலைகளின் மேற்பரப்பில் மஞ்சள் கலந்த பச்சை நிறத்திட்டுக்களும், கீழ்பரப்பில் பழுப்புநிறத்திட்டுகளும் காணப்படும்.

பூச்சியின் அடையாளம்:

குஞ்சுகள்: மஞ்சள் நிறத்தில் இருக்கும்

இலைப்பேன்: கருமை நிறமாகவும், மயிரிழைகளால் ஆன இறகுகளைக் கொண்டிருக்கும்.

கேலோதிரிப்ஸ் இன்டிகஸ்

தாக்குதலின் அறிகுறிகள்:

இலைகளில் வெள்ளை நிற புள்ளிகள் காணப்படும்

பூச்சியின் அடையாளம்:

இலைப்பேன் – கருமை நிறமாகவும், மயிரிழை போன்ற இறக்கைகளைக் கொண்டிருக்கும்

பிரன்கிலினியெல்லா ஸ்குல்ட்டுசி

தாக்குதலின் அறிகுறிகள்:

நுனி இலைகள் சுருண்டுவிடும்

குருத்து அழுகல் நோயை பரப்புகிறது.

பூச்சியின் அடையாளம்:

குஞ்சுகள்: மஞ்சள் நிறமுடையது.

இலைப்பேன்: கருமை நிறமாகவும், மயிரிழை போன்ற இறக்கைகளைக் கொண்டிருக்கும்.

கட்டுப்படுத்தும் முறை:

குயின்லாபாஸ் 25% EC 1400 மி.லி /எக்கடர்

பொன்வண்டு: ஸ்பினோடீரா இண்டிகா

தாக்குதலின் அறிகுறிகள்:

தாக்கப்பட்ட செடிகள் காய்ந்துவிடும்

புழு தண்டினைத் துளைத்து உட்சென்று உண்ணும்

தாக்கப்பட்ட செடிகளை பிடுங்கினால் அதற்கு அடியில் புழு மற்றும் கூட்டுப்புழுக்கள் காணப்படும்

பூச்சியின் அடையாளம்:

புழு: பழுப்பு நிறமுடையது, மெதுவாக நகரக்கூடியது

வண்டு: பளப்பளப்பாக, சிகப்பு (அ) பச்சை நிறத்திலிருக்கும்

கட்டுப்படுத்தும் முறை:

கோடைக்காலங்களில் நிலத்தை ஆழமாக உழுதல் வேண்டும்

நன்கு மட்கிய தொழு உரங்களை இட வேண்டும்

பாதிக்கப்பட்ட செடிகளை பிடுங்கி அகற்றிவிட வேண்டும்.

ஒட்டுண்ணிகளான பிராக்னிட்ஸ்,ட்ரைக்கோகேரமிட்ஸ் மற்றும் நிக்கிளியிஸ் வைரஸ்,பச்சை மஸ்கட்ரைன் பூச்சை ஆகியவற்றை கொண்டு கட்டுப்படுத்தலாம்.

கார்போபீயுரான் குருணை மருந்தினை ஹெக்டர்க்கு 2.25 கிலோ வீதம் தூவி பொன்வண்டின் தாக்குதலைத் தவிர்க்கலாம்

கரையான்: ஓடோனோடெர்மஸ் ஒபிசஸ்

தாக்குதலின் அறிகுறிகள்:

தாக்கப்பட்ட செடிகள் காய்ந்து விடும்

கரையான் வேரினுள் நுழைந்து உட்சென்று உண்ணுகிறது

காய்களில் சிறியத்துளைகள் காணப்படும்

பூச்சியின்அடையாளம்:

கரையான் கூட்டமாக புற்றுக்குள் வாழும்.இதில் வேலைக்கார கரையான் ராஜா,ராணி கரையான் என மூன்று வகை காணப்படும்

வேலைக்காரகரையான்: சிறியதாகவும்,மென்மைானஉடலையும், புழுப்பு நிற தலையையும் கொண்டு சுமார் 4மில்லி மீட்டர் அளவு இருக்கும்

கட்டுப்படுத்தும் முறை:

கடப்பாரைக் கொண்டு கரையான் புற்றை கொத்தி அகற்ற வேண்டும்

நன்கு மக்கிய இயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டும்

இடைச்சாகுபடி முறைகளை தொடர்ச்சியாக கையாள்வதன் மூலம் கரையான் பாதிப்பைத் தவிர்க்கலாம்

குளோரோபைரிபாஸ் 20 EC

விதை நடவுக்கு முன்பாக குளோர்பைரிபாஸ் தூளை ஹெக்டர்க்கு 30-40 கிலோ வீதம் தூவி கரையானைக் கட்டுப்படுத்தலாம்

விதை நேர்த்தி செய்த நிலக்கடலை விதைக்க வேண்டும் (1 கிலோ நிலக்கடலை + 6.5 மிலி குளோர்பைரிபாஸ்)

வெள்ளைப்புழு: கோலோட்ரைக்கியா செரோட்டா

தாக்குதலின் அறிகுறிகள்:

புழு வேர்களையும், காய்களையும் உண்டு சேதப்படுத்தும்

தாக்கப்பட்ட செடிகள் காய்ந்து மடிந்துவிடும்

பூச்சியின் அடையாளம்:

முட்டை: உருண்டையாகவும், வெள்ளை நிறத்திலும் இருக்கும்

புழு: புழு வெள்ளைக் கலந்த மஞ்சள் நிறமாகவும், C வடிவிலும் இருக்கும்

கட்டுப்படுத்தும் முறை:

பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக் கொல்லியைத் தெளிக்கவும்

கார்போபியுரான் 3% CG 33.3 கி.கி/ஹெக்டேர்

குளோரோபைரிபாஸ் 20% EC 1000 மி.லி /ஹெக்டேர்

போரேட் 10 CG 25 கி.கி/ஹெக்டேர்

காய் துளைப்பான்: அனிசோலேபிஸ் ஸ்டாலி

தாக்குதலின் அறிகுறிகள்:

இளம் காய்களை புழு துளைத்து உட்சென்று உண்கிறது

தாக்கப்பட்ட கரய்களில் பருப்பு (அ) கொட்டைகள் இருக்காது

பூச்சியின் அடையாளம்:

புழு: ஆரம்ப நிலையில் வெள்ளையாகவும் இறுதியில் பழுப்புநிறத்திலும் இருக்கும்

அந்துப்பூச்சி: பழுப்பு நிறத்தில் இருக்கும். கருமை நிறத்தில் மலவாய்க் கொம்புகள் காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறை:

பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக் கொல்லியை விதைத்த 40 வது நாளில் மண்ணில் இட்டு காய்துளைப்பானை கட்டுப்படுத்தலாம்.

மாலத்தையான் 5 D 25 கி.கி/ஹெக்டேர்

கார்போபியுரான் 3% CG 50 கி.கி/ஹெக்டேர்

காய் பூச்சி: எலோசமோலோமஸ் சாரிடிட்ஸ்

தாக்குதலின் அறிகுறிகள்:

அறுவடை செய்த காய்கள் சுருங்கிய பருப்புகளைக் கொண்டிருக்கும்

பூச்சியின் அடையாளம்:

குஞ்சுகள்: இளம்சிவப்பு நிறத்தில் இருக்கும்

பூச்சி: பழுப்பு நிறத்தில் இருக்கும்

கட்டுப்படுத்தும் முறை:

எக்டர்க்கு மாலத்தியான் 25 கிலோ தூளை மண்ணில் மேல் தூவிய பிறகு விதை நடவு செய்ய வேண்டும்

குயின்லாபாஸ் 25% EC அல்லது மேற் கூரிய பூச்சிக் கொல்லியைத் விதைத்த 40 வது நாளில் மண்ணில் இட்டு காய் பூச்சியைக் கட்டுப்படுத்தலாம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories