சூரியகாந்தி விதை நேர்த்தி

 

 

நல்ல வடிகால் வசதி உள்ள எல்லா வகையும் சூரியகாந்தி சாகுபடிக்கு ஏற்றது கரிசல் மண் பூமியில் நன்றாக வளர்ந்து அதிக மகசூல் கொடுக்கக்கூடியது.

சாகுபடி நிலங்களை இரண்டு முதல் மூன்று முறை நன்கு உழவு செய்ய வேண்டும். கடைசி உழவின்போது ஒரு ஏக்கருக்கு 5 டன் மக்கிய தொழு உரம் இட்டு மண் கட்டிகள் நன்கு உடையும் படி உழவு செய்ய வேண்டும்.

மானாவாரி நிலங்களில் ஏக்கருக்கு 7 கிலோ இரவை நிலங்களில் ஏக்கருக்கு 6 கிலோ விதை தேவைப்படும்.

விதை நேர்த்தி

விதைகளை சிங்சல்பெட் 2% கரைசலில் 12 மணி நேரம் ஊறவைத்து நிழலில் உலர்த்திய பிறகு விதைப்பு செய்யலாம் அல்லது கார்பென்டாசிம் 2 கிராம் அல்லது டிரைகோடெர்மா விரிடி 4 கிராம் ஒரு கிலோ விதையுடன் கலந்து 24 மணி நேரம் விதைப்பு செய்ய வேண்டும். விதை நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை 15 நிமிடம் உலர்த்தி உடனடியாக விதைக்க வேண்டும்.

சூரியகாந்தி விதைகளை மானாவாரியில் உழுத பிறகு தகுந்த இடைவெளியில் அதாவது வரிசைக்கு வரிசை 45 சென்டிமீட்டர் செடிக்கு 30 சென்டி மீட்டர் இடைவெளியில் குழிக்கு 2 விதைகள் வீதம் மூன்று சென்டிமீட்டர் ஆழத்தில் ஊன்ற வேண்டும். பிறகு 10 ஆம் நாள் செழிப்பாக உள்ள ஒரு செடியை விட்டு மற்ற செடிகளை கலைத்து விட வேண்டும்.

விதைத்தவுடன் நீர் விட வேண்டும். பிறகு ஏழாம் நாள் உயிர்த் தண்ணீர் பாய்ச்சவேண்டும். பூக்கும் தருணத்தில் இரண்டு முறை தண்ணீர் விட வேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories